சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான்.
இனிமேல் இயற்கை சீற்றங்கள் அடிக்கடி வரப்போகின்றன. பேரிடர் சீற்றங்களை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கிய பின் பாமக தலைவர் பேட்டியளிக்கையில்;- சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனதான் எப்போதும் அறிவிக்கிறார்கள். இது எங்களுக்கு தெரியாதா?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உலகமே நவீன தொழில் நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது. காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இனிமேல் இயற்கை சீற்றங்கள் அடிக்கடி வரப்போகின்றன. பேரிடர் சீற்றங்களை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை ஆய்வு மையம் எதற்கு? என ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க;- அண்ணாமலை, எல்.முருகனுக்கு திடீர் அழைப்பு விடுத்த நிர்மலா சீதாராமன்- ஆலோசனைக்கான காரணம் என்ன.?
மேலும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.25,000 வழங்க வேண்டும். தமிழக அரசு கோரி நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். குறைந்தபட்சமாக ரூ.2000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.