
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்னையின் முன்னாள் மேயரும், எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு நடத்தினர்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் டெங்கு காய்ச்சல் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை சுமார் 9.30 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் சென்றார்.
மருத்துவமனைக்குள் சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், கொசு உற்பத்தி பண்ணையாக சென்னை மாறி வருவதாக குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.