அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா? தடை கோரி ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!!

Published : Jul 08, 2022, 06:25 PM IST
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா? தடை கோரி ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!!

சுருக்கம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கில் தீர்ப்பு வரும் 11ம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கில் தீர்ப்பு வரும் 11ம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரம் இருக்கிறது என்றும் வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பதால் 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வல் தெரிவித்திருந்தார். மேலும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுவில், பொதுக்குழுவைக் கூட்ட 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அந்த விதிகள் பின்பற்றப்படவில்லை. அதனால் பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன் ரத்து செய்ய வேண்டும்.. எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு.. பதற்றத்தில் பன்னீர்.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளின் தற்போதைய நிலை என்ன? அப்பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்புக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது, வாதிட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார். ஆனாலும் ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக நினைத்து ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அவரின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றத்தில் முன்கூட்டியே அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: சசிகலா வழியில், பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்வார் எடப்பாடி.. கேசிபி சொன்ன அதிர்ச்சி தகவல்!

முன் அனுமதி பெறாமல் தாக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்திருக்கும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்தது. மேலும், கடந்த டிசம்பர் மாத செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர் இதை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்று விதி திருத்தப்பட்டது. செயற்குழுவிற்கு விதிகளை திருத்தும் அதிகாரம் இல்லாததால் பொதுக்குழு ஒப்புதல் வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 23 ஆம் தேதி அன்று நடந்த பொதுக்குழுவில் இந்த திருத்தம் தாக்கல் செய்யப்படவில்லை.  திருத்தம் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடந்த உட்கட்சித் தேர்தலும் செல்லாது என்றும் எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டார். திங்கள் கிழமை காலை 10 மணிக்கு அதிமுகவில் பொதுக்குழு கூட உள்ள நிலையில் 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதால் பொதுக்குழு குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!