சென்னையில் திமுக பேரணிக்கு தடை கோரி வழக்கு... நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

By Asianet TamilFirst Published Dec 22, 2019, 10:02 PM IST
Highlights

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்த மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவானது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது. கட்சிகளைத் தாண்டி அனைத்து தரப்பினரும் இப்பேரணியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 
 
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் நாளை நடைபெற உள்ள பேரணிக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பேரணிக்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்த மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவானது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது. கட்சிகளைத் தாண்டி அனைத்து தரப்பினரும் இப்பேரணியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக கூட்டணியின் பேரணிக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் தாக்கல் செய்தார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்; பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படும் என்று மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான் வழக்கு அவசர வழக்காக தற்போது விசாரிக்கப்பட்டுவருகிறது. விடுமுறைக்கான சிறப்பு அமர்வில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பி ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், இந்தப் பேரணிக்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. உருவ பொம்மை எரிக்கப்படுமா, சட்ட நகல் கொளுத்தப்படுமா என்று திமுகவிடம் போலீஸார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நிபந்தனைகளை ஏற்றால் பேரணிக்கு அனுமதி வழங்குவீர்களா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ட்ரோன் கேமரா மூலம் பேரணியை கண்காணித்து, நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்காலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு தரப்பு வாதங்களின் அடிப்படையில்  நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பேரணிக்கு நீதிமன்றம் வழங்கியது. 

click me!