ஜெயலலிதா இறந்தும் தொடரும் சிக்கல்கள்... கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 24, 2019, 12:17 PM IST
Highlights

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன், ஐதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட 4 சொத்துக்களை முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. 
 

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன், ஐதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட 4 சொத்துக்களை முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. 

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு செலவில் ஜெயலலிதா நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் எம்எல்.ரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தனி நபருக்கு சொந்தமான இடங்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் அரசு நினைவிடமாக மாற்ற அனுமதிக்கப்படுகிறது என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதில் வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை  இருந்தால் தெரிவிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வருமான வரித்துறை பதில் மனுவில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி ஏதும் உள்ளதா? ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை உள்ளதா இல்லையா? என்பது குறித்தும் இன்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான வருமானத்துறை அதிகாரிகள், 16.72 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி உள்ளதால் கடந்3த 2007ம் ஆண்டு முதல் போயஸ் கார்டன் இல்லம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை செலுத்த யார் முன்வருவார்? அவரது வருபாக்கியை செலுத்தினால் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை ‘’ எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வரியை யார் செலுத்துவது என 2 வாரத்தில் பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

click me!