Chennai Election Results 2022:சென்னை மாநகராட்சி வசமாக்கிய திமுக..153 வார்டுகளில் வெற்றி..வாகை சூடிய ஸ்டாலின்..

Published : Feb 22, 2022, 10:51 AM ISTUpdated : Feb 22, 2022, 05:27 PM IST
Chennai Election Results 2022:சென்னை மாநகராட்சி வசமாக்கிய திமுக..153 வார்டுகளில் வெற்றி..வாகை சூடிய ஸ்டாலின்..

சுருக்கம்

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மொத்தம் 200 வார்டுகளில் 153 வார்டுகளை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.  

வழக்கம் போல சென்னை திமுகவின் கோட்டை என்பதை ஸ்டாலின் நிரூபித்துக் காட்டியுள்ளார். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மொத்தம் 200 வார்டுகளில் 153 வார்டுகளை கைப்பற்றி திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்தியாவின் பழமையான மாநகராட்சிகளில் ஒன்று சென்னை மாநகராட்சி, சுதந்திரத்திற்கு முன்பு அதற்குப் பின்பு என பல மேயர்கள் இருந்தாலும் 1996  ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகுதான் மேயர் பதவி முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதற்கு முன் பலர் மேயர்களாஎ இருந்தாலும் ஸ்டாலின் அந்த பதவிக்கு வந்தபிறகு அது அது செல்வாக்கு மிகுந்த பதவியாக கவனம் பெற்றது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகளில் 150 வார்டுகளுக்குமேல் கைப்பற்றுவோம் என திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில், அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி  மொத்தம் 200 வார்டுகளில் இதுவரை திமுக 153 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  அதிமுக 15 ,சுயேட்சை 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை மநாகராட்சியில் பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கைப்பற்றியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!