கோட்டூர்புரத்தை துர்நாற்றபுரமாக்கிய சென்னை மாநகராட்சி...!!! பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கொந்தளிப்பு, சாலைமறியல்...!!!

By Ezhilarasan BabuFirst Published Nov 26, 2019, 5:51 PM IST
Highlights

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் இனி இங்கே சாக்கடை கழிவுகள் கொட்டப்படமாட்டாது.  என வாக்குறுதி அளித்தனர். ஆனால் கடந்த நான்கு தினங்களாக கொண்டு வந்து கொட்டிவைத்துள்ள கழிவுகளையும் உடனே அகற்றித்தரவேண்டும் என்று பொதுமக்கள் வலுயுற்றுத்தினர். அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர்  பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  

சென்னை  கோட்டூர்புரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி பூங்கா மாற்ற நடந்து வரும் பணியில் சாக்கடைக் கழிவுகளை கொட்டி வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  கோட்டூர்புரம் பறக்கும் ரயில் நிலையத்தையொட்டி 2 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.  இது தற்போது விளையாட்டு மைதானமாக செயல்பட்டுவருகிறது .  அதையொட்டி  சென் பேட்ரிக் பள்ளி,  மாற்றுத்திறன் உடைய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி,  அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்,  சென் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி,  என சுமார் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 

இங்கு சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்,  இங்கு  மாநகராட்சி பூங்கா அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள் தாழ்வாக உள்ள இந்த இடத்தில் சாக்கடை கழிவுகளை கெட்டி மேடாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது அங்கு கொட்டப்பட்டுவரும் கழிவுகளால் கோட்டூர்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.  இதனால் அப்பகுதி மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள  பள்ளி மாணவர்களுக்கு  நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்  பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வந்த  மாணவர்களின் பெற்றோர் சாக்கடை கழிவுகளை கொண்டுவரும் லாரிகளை சிறை பிடித்து தடுத்து நிறுத்தியதுடன்.  கழிவுகளை இங்கு கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனாலும் பணியில் ஈடுபட்டிருந்த  மாநகராட்சி ஊழியர்கள் பெற்றோர்களின் கோரிக்கையை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், பணியை வேகமாக முடிக்க சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.  நாங்கள் இப்படித்தான் கொட்டுவோம் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியதால், பொதுமக்களும் ,  பெற்றோர்களும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சாலைமறியலில் இறங்கினார்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் இனி இங்கே சாக்கடை கழிவுகள் கொட்டப்படமாட்டாது.  என வாக்குறுதி அளித்தனர். ஆனால் கடந்த நான்கு தினங்களாக கொண்டு வந்து கொட்டிவைத்துள்ள கழிவுகளையும் உடனே அகற்றித்தரவேண்டும் என்று பொதுமக்கள் வலுயுற்றுத்தினர். அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர்  பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  

ஏற்கனவே டெங்கு, டைபாய்டு ,  சிக்கன்குனியா,  உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்களால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மக்கள் வசிக்கும் பகுதியில் சாக்கடைக் கழிவுகளை கொட்டி அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை மாநாகராட்சி உருவாக்கியிருப்பது,  அப்பகுதி மக்களிடத்தில் அதிரிப்தியை ஏற்படுத்தியுள்ளது.  பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய சென்னை மாநகராட்சியே  இதுபோல சுகாதார சீர்கேட்டில் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையவும் வைத்துள்ளது.  
 

click me!