கர்ப்பிணிகள், மாற்றுதிறனாளிகள் ,முதியோர்களுக்கு சலுகை..!! மருத்துவமனைக்கு அழத்து செல்ல மாநகராட்சி ஏற்பாடு..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 16, 2020, 5:55 PM IST
Highlights
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .  
 
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களை பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள ஃபோர்டு இந்தியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிஎஸ்ஆர் நிதியில் வழங்கப்பட்ட 25 வாகனங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று  கொடியசைத்து துவக்கி வைத்தார் ,  பின்னர் செய்தியாளர்களிடம்  பேசி அவர் ,  கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ,  பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .  


இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் 26 தகவல்கள் சேகரிக்கும் மையங்கள் துவங்கப்பட்டுள்ளன .  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பரிசோதனை மையங்களுக்கு பொதுமக்கள் சென்று வருவதில் எந்த சிரமமும்  ஏற்படாமலிருக்க மாநகராட்சியின் சார்பில் பரிசோதனை மையங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று மீண்டும் அவர்களின் இல்லங்களில் கொண்டு சேர்க்க வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  அதற்காக போர்டு இந்தியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிஎஸ்ஆர் நிதியில் 25 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன,  இந்த வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர்கள் ,  எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளை ,  ஃபோர்டு  இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது .  இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ தேவைகளுக்காக வெளியே செல்ல இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .  



இந்த சேவையினை மாநகராட்சியின் 1913 உதவி என்னை தொடர்புகொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம் ,  இதற்காக மகேந்திரா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் 10 வாகனங்கள் சிஎஸ்ஆர் நிதியில் வழங்கப்பட்டுள்ளன .  கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும்போது முகமூடி அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .  அதன்படி பொதுமக்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் வகையில் குறைந்தது இரண்டடுக்கு முகமூடி அல்லது கைக்குட்டை அல்லது வீட்டில் உள்ள சுத்தமான துணியால் ஆன முகமூடியையும் பயன்படுத்தலாம் . முகமூடிகள் கிடைக்காதபட்சத்தில் வீட்டிலேயே துணியாலான இரண்டடுக்கு மூன்றடுக்கு முகமூடிகளை கையினாலோ அல்லது தையல் இயந்திரம் கொண்டு தயாரித்துக் கொள்ளலாம் ,  அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் மருத்துவ முகமூடி N95 முகமூடிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியம் இல்லை .

 

வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய எளிய மறுபயன்பாடு கொண்ட முகமூடிகளை பயன்படுத்தினாலே போதுமானது .  ஒருவருக்கு இரண்டு முக கவசங்களை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும் ,  உபயோகித்த பின் சோப்பு மற்றும் வெந்நீரில் சுத்தம் செய்து நன்கு உலர்ந்த பின் மீண்டும் பயன்படுத்த வேண்டும் .  இதுபோன்ற மாறுவதற்கு உகந்த முகமூடிகளை தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள் ஒரு வைரஸ் நோய் தொற்று உள்ள நோயாளிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட முகமூடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஒருவர் பயன்படுத்திய முகமூடியை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தனித்தனியாக முகமூடிகளை பயன்படுத்த வேண்டும் என ஆணையர் கேட்டுக் கொண்டார் .
 
click me!