சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ சேவை தொடக்கம்… இன்றும் நாளையும் இலவசமாக பயணிக்கலாம்….

First Published May 26, 2018, 6:14 AM IST
Highlights
chennai central to airport metro free service


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல்  விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் இன்றும் நாளையும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 28 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் (2.7 கி.மீ.) மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (4.5.கி.மீ) வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும். 25 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்யலாம். சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 2 வழிப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இனி செயல்படும்.

சென்ட்ரல் வரையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் எந்த ரெயில் நிலையத்தில் வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது..

click me!