ஓர்லாண்டோ துப்பாக்கி சூட்டுக்கு  துடிக்கும் மோடி தூத்துக்குடிக்கு துடிக்காது ஏன்?  அல்லு தெறிக்கவிடும் சசிதரூர் !!

First Published May 26, 2018, 5:43 AM IST
Highlights
sasi tharoor question to modi why u bather about thuthukudi gun fire


அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு அதிர்ச்சி தெரிவிக்கும், பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு மவுனமாக ஈருப்பது ஏன் ? என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கேள்வி எழுப்பி மோடியை அலற விட்டுள்ளார்

அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடு பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்; உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று  பதிவிட்டிருந்தார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் அப்பாவி போராட்டக் காரர்கள் 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதைச் சுட்டிக்காட்டி  கேள்வி எழுப்பியுள்ள சசிதரூர் , மோடியின் ட்வீட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தமிழகத்தின் தூத்துக்குடியில் 13 இந்தியர்கள் போலீசால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு, மோடி பேசாமல் இருப்பதாக வெளியிடப்பட்ட மீம்ஸையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமெரிக்க மக்களுக்காக பதறித் துடித்த மோடியின் உள்ளம், இங்கு இந்திய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது துடிக்காமல் மௌனமாக இருப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் இந்த டுவிட் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

click me!