ஸ்டாலினுக்கு செக்.. விரைவில் ஆளுநர்கள் மாநாடு.. பகீர் கிளப்பும் டெல்லி ராஜகோபாலன்.

By Ezhilarasan BabuFirst Published Feb 17, 2022, 11:49 AM IST
Highlights

முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறி? பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் கலந்துகொள்வது சந்தேகம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் கலந்து கொள்ள மாட்டார்கள். 

மாநில உரிமைகளை பாதுகாக்க விரைவில் டெல்லியில்  எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு நடைபெறும் என்றும், அதில் திமுக கலந்து கொள்ளும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் ஆளுநர்  மாநாடு நடைபெற உள்ளதாக டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் கூறியுள்ளார். அதற்கான ஏற்பாடுகளில் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தக்கர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற  மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான பகிரத முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருகிறது. அதிலும் குறிப்பாக  மேற்கு வங்கம் தமிழகம் போன்ற மாநிலங்களில் பல ஆண்டுகளாக முயற்சித்தும் அந்த முயற்சி பாஜகவுக்கு பலன் கொடுக்கவில்லை. இந்நிலையில் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் எதிர்க்கட்சி முதல்வர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர். ஒருபுறம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தக்கருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதேபல் திமுக என்பது மாநில சுயாட்சியை கொள்கையாகக் கொண்டு செயல்படும் கட்சி என்பதால் திமுக முதல்வர்  ஸ்டாலினுக்கும் மாநில ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதலும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில்தான் கடந்த 12ஆம் தேதி முதல் மேற்கு வங்க சட்டசபையை காலவரையின்றி முடக்குவதாக ஆளுநர் ஜெகதீப் தக்கர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். 174 சட்டப் பிரிவின்படி மேற்குவங்க சட்டசபையை முடக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது எதிர்க்கட்சி முதல் அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ஆளுநர் ஜெகதீப் தக்கருக்கும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் மேற்குவங்க சட்டசபையை ஆளுநர் முடக்கிய செயல் விதிமுறைகள் மற்ற மரபுகளுக்கு எதிரானது, அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன் மாதிரியாக இருக்க வேண்டும், ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் மரியாதை கொடுப்பதுதான் ஜனநாயகத்தின் அழகே உள்ளது என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த 11 ஆம் தேதி மாலை மேற்கு வங்க சட்டசபை விவரங்கள் துறை அமைச்சரவையிலிருந்து அடுத்தடுத்த சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் 2-ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே திரிணாமுல் காங்கிரஸ் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில்தான் சட்டசபையை முடித்து வைக்க உத்தரவிட்டேன், எனவே தமிழக முதல்வரின் புரிதல் உண்மையை நிலத்துடன் ஒத்துப்போகவில்லை,  உண்மையை உறுதி செய்து கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்ட கருத்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளது. சட்டசபையின் முடித்து வைக்க கோரி மாநில அரசு அனுப்பிய கடிதத்தின் நகலை இணைத்துள்ளேன் என ஆளுநர் ஸ்டாலினுக்கு பதிலளித்திருந்தார். தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதன்பிறகு டுவிட்டரில் பதிவிட்ட முதல்வர் ஸடாலின், பாஜக அல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் அமைப்புக்கு எதிராக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. மாநில உரிமைகளை காக்க திமுக எப்போதும் துணை நிறுகும் என மம்தா பானர்ஜிக்கு தான் உத்திரவாதம் அளித்ததாகவும்  ஸ்டாலின் அதில் கூறியிருந்தார்.

மேலும், ஆளுநர் அரசியலமைப்பு சட்ட மீறல்கள் வெட்கக்கேடானது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து இருவரும் தொலைபேசியில் வேதனையை பகிர்ந்து கொண்டதாகவும், விரைவில் எதிர்கட்சியில் உள்ள முதல்வர் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக மம்தா பரிந்துரைத்தார் என்றும், மாநில சுயாட்சியை  நிலைநாட்ட டெல்லியில் எதிர்க் கட்சி  முதல்வர்கள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது எனவும் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவு பேசுபொருளாக மாறியுள்ளது. எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் மாநாடு என்ற அறிவிப்பு தொடர்பாக ஊடகங்கள் விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தினால், ஆளுநர்களும் மாநாடு நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்த விவரம் பின்வருமாறு:- 2024 நாடாளுமன்ற தேர்தலில் தான் பிரதமராக வேண்டும் என்ற முனைப்பில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

இதே போல தான் தமிழக முதலமைச்சரும் 27 முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதே நேரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். தெலுங்கானாவில் பாஜக வேரூன்றிய விடும் என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார்.  அதேபோல விரைவில் முதல்வர்கள் மாநாடு நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் இதில் மேற்கு வங்க மாநிலத்தின் அண்டை மாநிலமான ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறி? பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் கலந்துகொள்வது சந்தேகம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் கலந்து கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின்  சமூகநீதிக்காக 27 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி ஒரு மாதம் ஆகிவிட்டது ஆனால் இதுவரை யார் யார் அவருக்கு பதில் கடிதம் எழுதினார்கள் என்ற விவரம்வெளியாகவில்லை. 

இது குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், இப்படிப்பட்ட நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலின், மம்தா டெல்லியில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்படும் என கூறியிருக்கிறார். இதற்கு இணையாக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்க ஆளுநர்கள் மாநாடு நடத்த ஆவலாக இருக்கிறார். ஐந்து மாநில ஆளுநர்களை இணைத்து நானும் ஒரு மாநாடு நடத்துவேன் என்று தெரிவித்துள்ள அவர் உடனே குடியரசுத் தலைவர் அவசரமாக ஆளுநர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறார். அதேபோல் முதல்வர்கள் டெல்லியில் மாநாடு கூட்டினால், அவர்கள் ஆளுநர்களின் செயல்பாடு குறித்து தான் விவாதிக்க போகிறார்கள். அப்போது இந்த மோதல் மேலும் அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார். 
 

click me!