அடுத்த டார்கெட் எடப்பாடிதான்.. பிப்ரவரி 19ம் தேதிக்கு பிறகு பாருங்க.. டுவிஸ்ட் வைக்கும் நாஞ்சில் சம்பத்.!

Published : Feb 17, 2022, 09:00 AM IST
அடுத்த டார்கெட் எடப்பாடிதான்.. பிப்ரவரி 19ம் தேதிக்கு பிறகு பாருங்க.. டுவிஸ்ட் வைக்கும் நாஞ்சில் சம்பத்.!

சுருக்கம்

 கொடநாடு கொலை, கொள்ளை விசாரணை வளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தப்பி விட்டார்.‌ ஆனால், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் குறியில் இருந்து ‌எடப்பாடி பழனிச்சாமி தப்ப முடியாது.

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் தங்கம், வைரம், வெளிநாட்டு கரன்சி மற்றும் சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அங்கிருந்த காவலாளியை கொலை செய்ய உத்தரவிட்டது எடப்பாடி பழனிச்சாமி தான் என நாஞ்சில் சம்பத் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்களும் நட்சத்திர பேச்சாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேனி மாவட்டம் கூடலூர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;- கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இருப்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெரிய சாதனை.

நீட் தேர்வு குறித்து ஒரே மேடையில் விவாதிக்கலாம் என முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமியுடன் நான் விவாதிக்கத் தயார். ஆண்மை இருந்தால் என்னுடன் எடப்பாடி பழனிச்சாமி விவாதிக்க தயாரா? என சவால் விட்டு பேசினார். மேலும், அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி முறிந்த நிலையில், அண்ணாமலை - எடப்பாடி பழனிச்சாமி இருவரும் வெவ்வேறு கருத்துக்களைக் கூறி மக்களை குழப்பி வருகின்றனர். 

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் வீட்டில் இன்றைக்கு சோதனை நடைபெறுகிறது.‌ பிப்ரவரி 19ம் தேதிக்கு பிறகு அவரது வீட்டிலும் சோதனை நடைபெறும்.‌முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் தங்கம், வைரம், வெளிநாட்டு கரண்சி மற்றும் சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அங்கிருந்த காவலாளியை கொலை செய்ய உத்தரவிட்டது எடப்பாடி பழனிச்சாமி தான் என நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டினார்.

அப்போது நடைபெற்ற விசாரனை வளையத்தில் இருந்து அவர் தப்பி விட்டார்.‌ ஆனால், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் குறியில் இருந்து ‌எடப்பாடி பழனிச்சாமி தப்ப முடியாது என நாஞ்சில் சம்பத் தெரிவத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!