லலிதா ஜூவல்லர்ஸ் ஓனரின் ஓரவஞ்சனை... ஆந்திர- தெலுங்கானாவுக்கு கோடிகளை கொடுத்து தமிழகத்தை வஞ்சித்த கிரண் குமார்!

By Thiraviaraj RMFirst Published May 18, 2020, 12:02 PM IST
Highlights

லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் கொரானா நிவாரண நிதியாக கோடிக்கணக்கில் ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்தவர், அவருக்கு அள்ளிக்கொடுத்த தமிழக மக்களுக்கு கிள்ளிக்கூடக் கொடுக்கவில்லை.
 

லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் கொரானா நிவாரண நிதியாக கோடிக்கணக்கில் ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்தவர், அவருக்கு அள்ளிக்கொடுத்த தமிழக மக்களுக்கு கிள்ளிக்கூடக் கொடுக்கவில்லை.

எந்த டிவியை திறந்தாலும் எந்த செய்தித்தாள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் சமீபகாலமாக இவருடைய விளம்பரத்தை பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு கோடிக்கணக்கான பட்ஜெட்டை விளம்பரத்திற்காக ஒதுக்கி அதில் யாரையும் நடிக்க விடாமல் தானே ஹீரோ போன்று அவதாரமெடுத்து தனது நகை கடைக்கான விளம்பர தூதுவராக வளம் வந்தவர்தான் கிரண்குமார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். மார்வாடியான இவரது தந்தை மூல்சந்த் ஜெயின் வட்டிக்கடை நடத்த ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு குடிபெயர்ந்தார். அங்குதான் கிரன்குமார் ரெட்டி பிறந்தார் அங்கிருந்து அருகில் உள்ள மிகப்பெரிய மெட்ரோபாலிட்டன் சிட்டியான சென்னையில் தனது வியாபாரத்தை தொடங்கினார். பின்னர், இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்த லலிதா ஜூவல்லரி கையகப்படுத்தி சென்னையிலேயே குடியேறினார். கிரண்குமார் ஜெயின் வசம் வந்த லலிதா ஜுவல்லரி ஆந்திராவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று அதிவேகமாக வளர்ந்தது. 

அரசியல் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் சினிமாகாரர்கள் என அத்தனை துறையில் உள்ளவர்களையும் தனது நண்பர்கள் ஆக்கிக்கொண்டார் கிரண் குமார் ஜெயின். அடையார் ஆனந்த பவன் மற்றும் யுனிவர்சல் பூர்விகா மொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கிளைகளை அடுத்தடுத்து ஆரம்பிக்க தொடங்கிய நிலையில் நாமும் என் இதேபோன்று பல கிளைகளை நடத்தி வெற்றிபெற கூடாது என நினைத்தார் கிரண்குமார். அதன் அடிப்படையில்தான் தனக்கு ஏற்கனவே இருந்த அரசியல் பிரமுகர்களின் உதவி மற்றும்  முதலீடு பெற்று சென்னையில் பல இடங்களிலும் திருவள்ளூர், திருப்பதி, விசாகபட்டினம், ஹைதராபாத், திருச்சி என 50க்கும் மேற்பட்ட கிளைகளை அடுத்தடுத்து கிரண் குமார் ஜெயின் திறந்துகொண்டே வந்தார்.

ஒரு கட்டத்தில் என்ன உள்ளே வருகிறது எவ்வளவு வெளியே செல்கிறது என்ற கணக்கு கூட புரியாத அளவிற்கு கிரண்குமார் வர்த்தக சாம்ராஜ்யம் வெறும் மூன்றே வருடங்களில் நூறு மடங்கு அதிகரித்து உள்ளதாக கூறுகிறார்கள். நகைக்கடை வட்டாரங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் இந்த நிலையில்தான் திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள லலிதா ஜுவல்லரி துளை போட்டு குழந்தைகள் அணியும் கார்ட்டூன் விளையாட்டு முகமூடிகளை அணிந்துகொண்டு காமெடியாக பாக்யராஜ் பட பாணியில் மொத்தமாக மிச்சம் மீதி வைக்காமல் வழிச்சு வாரிக்கொண்டு சென்றுவிட்டார்கள் கொள்ளையர்கள்.

கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அதன் பிறகு கொள்ளையர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி சில தகவல்கள் அவரை ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தன சில ஊடகங்கள். ஆனால் கொரோனா அவரது வள்ளல் தன்மையை தோலுரித்து காட்டிவிட்டது. அதாவது ஆந்திர- தெலங்கானா மாநிலத்துக்கு தங்கத்தையும்  தமிழகத்துக்கு பித்தளையும் (ம்ஹூம் அதுகூட இல்லை..) வெறும் கையையும் காட்டி விட்டார் கிரண் குமார் ஜெயின். 

கிரெண் குமார் புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் லலிதா ஜூவல்லர்ஸ் கிளைகளை நடத்தி வருகிறார். ஆனால் தமிழகத்தில் தான் லலிதா ஜூவல்லர்ஸுக்கு அதிக கிளைகள் உள்ளன. வியாபாரத்திலும் இங்கு தான் அவர் அதிகம் கல்லாக்கட்டுகிறார். இப்படி இருக்கையில், தனது பாரபட்சத்தை கொரோனா நிதி அளித்திருப்பதன் மூலம் காட்டி விட்டார் கிரண் குமார் ஜெயின். அதாவது, அவரது பிறந்த மாநிலமான ஆந்திரா- தெலங்கானா (இப்போது தான் இரு மாநிலங்களாக பிறந்தது) மாநிலங்களுக்கு மட்டும் கொரோனா நிவாரண நிதியை கொடுத்துள்ளார். தமிழகம்- கர்நாடக  மாநிலங்களுக்கு நயா பைசாவைக்கூட நீட்டவில்லை. 

கிரண் குமார் ஜெயின் ஆந்திர- தெலங்கானா மாநிலங்களுக்கு ரூ.3 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளார். அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் அவர் நிதி அளித்திருப்பதை இங்கே தவறாக கூறவில்லை. தமிழக மக்களிடம் நாங்க இருக்கோம். நம்பி வாங்க என அழைத்து வருமானத்தை ஈட்டிய கிரண் குமார் ஜெயின் கஷ்ட காலத்தில் தமிழக மக்களுக்கும் எதையாவது செய்திருக்க வேண்டுமல்லவா..? விளம்பரங்களில் கொடை வள்ளலாக தோன்றும் கிரண் குமார் ஜெயின் தனது உண்மையான முகம் வேறு என்பதை காட்டி விட்டார்.

click me!