தி.க., வீரமணியை விரட்டியடிங்க... ஸ்டாலின் மனைவி அதிரடி உத்தரவு..!

Published : Apr 11, 2019, 11:33 AM IST
தி.க., வீரமணியை விரட்டியடிங்க... ஸ்டாலின் மனைவி அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

கி.வீரமணிக்கு தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவான தீவிர பிரசாரத்தில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் அ.தி.மு.க.வின் அடிவயிற்றைத்தான் கலக்கியிருக்கிறது என்று பார்த்தால், தி.மு.க.வுக்கு பஞ்சாயத்தை இழுத்துக் கொண்டுவந்து விட்டுள்ளது கி.வீரமணி வடிவில். ஆம் பாலியல் அக்குறும்பு பேர்வழிகளின் முன்னோடி ஸ்ரீகிருஷ்ணன் தான்! என்று வீரமணி பேசி வைக்க, தமிழகமெங்கும் இருந்து கி.வி.க்கு எதிராக கிளர்ந்து எழுந்துவிட்டனர் இந்துக்கள். சென்னை, கோயமுத்தூர், திருப்பூர், மதுரை என்று எல்லா திக்கிலும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள். 

இந்த பஞ்சாயத்துகள் எல்லாம் திராவிட கழகத்தோடு முடிந்துவிட்டாலுங்கூட பிரச்னை இல்லை. அதையும் தாண்டி ‘வீரமணி இருப்பது தி.மு.க.வின் கூட்டணியில். இவர் தி.மு.க.வுக்காகதான் பிரசாரம் செய்கிறார்.  ஸ்டாலினும் இந்துக்களின் திருமணங்களை அசிங்கப்படுத்தி பேசியவர்தானே! அதனால் வீரமணியை ஆதரிக்கத்தான் செய்வார். ஆக வீரமணியின் பேச்சுக்காக தி.மு.க.வை இந்துக்கள் வெறுக்க வேண்டும்!’ என்று பிரச்சாரம் எழுந்துள்ளது. இது தி.மு.க.வின் வெற்றிக்காக ஆலயங்களை வலம் வரும் துர்கா ஸ்டாலினின் காதுகளில் விழ, மனுஷி நொதுவிட்டார்.

 

விளைவு, கணவர் ஸ்டாலினிடம் துர்கா கட் அண்டு ரைட்டாக சில விஷயங்களை சொன்னார். ’ம்ம்! சரி’ என்றவர், சிறிது யோசித்துவிட்டு பின் போட்ட உத்தரவுகளால் கி.வீரமணிக்கு தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவான தீவிர பிரசாரத்தில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாம். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மிக வெளிப்படையாக ‘அவர் வந்து பேசினால் இந்து ஓட்டுக்கள் எங்களுக்கு விழவே விழாது. ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க.’ என்று வெளிப்படையாகவே வீரமணியின் தரப்பிற்கு சொல்லிவிட்டார்களாம். 

அதேபோல் தி.மு.க.வில் பகுத்தறிவு பிரசாரத்துக்கும் சம்மர் லீவு விடப்பட்டுள்ளது! என்று தகவல். தேர்தல் முடியும் வரை இந்துக்களின்  தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், வாழ்வியல்கள் இவை எதை பற்றியும் வாய் திறக்கக்கூடாது என்று தளபதியே தன் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

 

காரணம்?...என்று அவர்களிடம் கேட்டபோது “எல்லாம் அண்ணியோட உத்தரவுதான். ’பகுத்தறிவுங்கிறது இந்து தெய்வங்களையும், இந்துக்களையும் பழிக்கிறதில்லை. அதை மனசுல வெச்சுக்குங்க. நீங்க என்னதான் கஷ்டப்பட்டு பிரசாரம் பண்ணினாலும், அருமையான வேட்பாளரை போட்டிருந்தாலும் கூட கடவுளோட ஆசியும், பெரும்பான்மை மக்களின் அபிமானமும் இல்லேன்னா உங்களாலே சாதிக்கவே முடியாது.’ன்னு அண்ணி வெடிச்சு பேசிட்டாங்களாம். அதுக்கு பிறகுதான் தளபதி இந்த முடிவை எடுத்திருக்கிறார். “ என்றனர். 
பகுத்தறிவுங்கிறது இந்து பழிப்பு அல்ல! அப்படிங்கிறதைத்தானே பல வருஷமா தி.மு.க.வுக்கு சொல்லிட்டு இருக்குது சமுதாயம்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!