தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம்? தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 27, 2021, 4:14 PM IST
Highlights

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது, கொரோனாவின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், வாக்கு எண்ணிக்கை தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.அதேபோல், மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடப்பது தெரியவந்தால் மே 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்வோம். வாக்கு எண்ணிக்கையை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கவும் தயங்கமாட்டோம் என சென்னை உயர்நீதிமன்ற கூறியிருந்தது. 

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மே 2ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போகும் என வெளியான தகவல் உண்மை இல்லை. ஓட்டு எண்ணிக்கையை தள்ளிவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. 

மே 1 மற்றும் 2ம் தேதி ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தினசரி ஆலோசனை நடத்தி வருகிறேன். ஏற்கனவே திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

click me!