சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் திருவள்ளுவர் படத்தில் மாற்றம்.. கொந்தளிக்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2021, 3:59 PM IST
Highlights

ஒட்டு மொத்த தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் உரிய திருவள்ளுவர் படம் பிரசுரிக்கபட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

ஒட்டு மொத்த தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் உரிய திருவள்ளுவர் படம் பிரசுரிக்கபட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்.

மத்தியக்கல்வி அமைச்சகம் கட்டுபாட்டில் இயங்கும் மத்தியகல்வி வாரியம் (சிபிஎஸ்சி) எட்டாம் வகுப்பு இந்திமொழிப்பாடத்தில் தமிழர்களின் வாழ்வியல் நூலானத் திருக்குறள் பற்றி வெளியிட்டிருப்பது தமிழர்களுக்கு கிடைத்தச் சிறப்பு, அது வரவேற்புக்குரியது. ஆனால் உலகப்பொதுமறை நூல் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நூலாகவும்,  இனியும் இதுபோன்று ஒரு நூல் வெளியிட இயலாதவகையில்  ஒரே நூலில் 130 அதிகாரங்களைக்கொண்டு 1330 குறட்பாக்களில் அறம், பொருள், இன்பம் அனைத்தையும் வார்த்து கொடுத்த வள்ளுவரின் திரு உருவ படத்தை தவறாகச் சித்தரித்து வெளியிட்டிருப்பது எதிர்காலச்சந்ததியினரின் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும். 


 

திருவள்ளுவரின் உண்மையான உருவம் யாரும் அறிந்திராவிட்டாலும் இப்படித்தான் இருந்திருக்கக் கூடும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள திருவள்ளுவரின் படம் புழக்கத்தில் வந்து அனைவராலும் ஒருமித்த ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கத்தில் இருந்துவருகின்றது.
இந்நிலையில் புதியசர்ச்சையினைக் கிளப்பும்வகையில் சிபிஎஸ்சி எட்டாம் வகுப்பு இந்திமொழிப் பாடத்தில் புரோகிதர் உருவில் திருவள்ளுவர் படத்தைப் பிரசுரித்து வள்ளுவரை இழிவுப்படுத்துவது மட்டுமின்றி ஒட்மொத்தத் தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலாக உள்ளது. 

சுமார் 2052 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தபொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவரால் எழுதப்பட்டு  இன்றைக்கும் உலகமக்களின் வாழ்வின் அச்சாரமாக விளங்கி, தமிழர்களின் தவநூலாகப் போற்றப்படும் திருக்குறள் நூலாசிரியர் திருவள்ளுவர் படம் தமிழக அரசால் அங்கிகரிக்கப்பட்டப் புகைப்படத்தை பிரசுரிக்கவேண்டும் என தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

click me!