சந்திரபாபு நாயுடுவயும் விடாத ‘வாரிசு அரசியல்’... அமைச்சரவையில் மகனை அமரவைத்தார்!

First Published Apr 2, 2017, 6:17 PM IST
Highlights
Nara Lokesh son of AndhraPradesh CM ChandrababuNaidu takes oath as cabinet minister in AP Govt


ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து தெலுங்கு தேசத்தில் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 11 பேர் நேற்று ஆந்திர மாநில அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

கடந்த 2014ம் ஆம்டு ஜூன்8-ந்தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பு ஏற்றதற்கு பின், மிகப்பெரிய அளவில் செய்யப்படும் அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வாரிசு, அரசியல் நடக்கிறது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகன் கே. சாரதா ராமராவ் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் அமைச்சரவையில் இடம் பெற்று அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.

அவரைப்போல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தனது மகன் லோகேஷை அரசியலுக்கு கொண்டு வந்தார். கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு ஆலோசனைகள் கூறி வந்தார். தொடர்ந்து மகனை அமைச்சராக்கவும் திட்டமிட்டார்.

இதற்காக ஆந்திர மந்திரி சபையில் சந்திரபாபு நாயுடு நேற்று மாற்றம் செய்தார். தனக்கு நெருக்கமானவராக இருக்கும் போஜ்ஜாலா கோபால கிருஷ்ணரெட்டி, பல்லே ரகுநாத ரெட்டி, ரவேலா கிஷோர் பாபு, பீதாலா சுஜாதா, கிமிடி மிர்னாலினி ஆகிய 4 பேரை மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.

அவர்களுக்குப்பதில் தனது மகன் லோகேஷ் உள்பட 11 பேரை புதிய அமைச்சர்களாக நியமித்தார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா விஜயவாடாவில் நேற்று நடந்தது. அவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் ஆந்திர மந்திரிகள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

சந்திரபாபு நாயுடு மகன் எம்.எல்.ஏ.வாக இல்லை என்பதால் ஆந்திர சட்டசபையின் மேல் சபைக்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தின் மேலவை உறுப்பினராக முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோ, கேஷ் தேர்வானார். அவருக்கு  பஞ்சாயத்து ராஜ், தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவரும், சந்திரபாபு நாயுடுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவருமான போஜாலா கோபால கிருஷ்ண ரெட்டி தனது எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்தார். அவரிடம், தனிப்பட்ட முறையில் பேசி, அமைச்சரவை மாற்றத்துக்கான காரணத்தை முதல்வர் சந்திரபாபு விளக்கினார்.

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்த ஆர்.வி. கிருஷ்ணா ராவ், பூமா அகிலா பிரியா, ஆதி நாராயணா ரெட்டி, அமர்நாத ரெட்டி, தெலங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் கே. கலா வெட்கட் ராவ், தெலுங்கு தேசம் கட்சியின் பிதானி சத்திய நாராயணா, நக்கா ஆனந்த பாபு, சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி, கல்வா ஸ்ரீவாசலு, கொத்தபள்ளி சாமுவேல் ஜவஹர் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றனர்.

click me!