3 முக்கிய விஷயம் இதுதானா..? பாஜக வை வீழ்த்த 14 கட்சி எடுத்த இப்படி ஒரு முடிவு...! "ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு"..!

By thenmozhi gFirst Published Dec 10, 2018, 2:16 PM IST
Highlights

வரும் மே மாதம் நடக்க உள்ள, பாராளுமன்ற தேர்தலில் பாஜக வை வீழ்த்த காங்கிரஸ் பெரும் முயற்சி மேற்கொண்டு உள்ளது.பாஜகவில் எப்படி அமித்ஷா மூளையாக செயல்படுகிறாரோ.. அதே போன்று காங்கிரஸ்க்கு யாருடா என்றால்... அட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தாங்க....
 

வரும் மே மாதம் நடக்க உள்ள, பாராளுமன்ற தேர்தலில் பாஜக வை வீழ்த்த காங்கிரஸ் பெரும் முயற்சி மேற்கொண்டு உள்ளது. பாஜகவில் எப்படி அமித்ஷா மூளையாக செயல்படுகிறாரோ.. அதே போன்று காங்கிரஸ்க்கு யாருடா என்றால்... அட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தாங்க....
 
ராகுல் கூட ஏதோ ஒரு சமயத்தில், பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து பேசினார்.. ஆனால் சந்திரபாபுவோ, "எங்கள் மாநிலத்திற்கு கூடுதல் நிதியையும் கொடுக்காமல் சிறப்பு அந்தஸ்தையும் கொடுக்காமல் இருக்கீங்க என கடும் கோபத்துடன் பாஜவை விட்டு வெளியேறினார்.... அது சரி. அப்போ இனித்தது.. இப்போ கசக்க தொடங்கியது...

இதில் என்ன சிறப்பு என்றால், சென்ற பாராளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பிடித்து மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக ஓட்டு சேகரித்தவர் தான் சந்திரபாபு நாயுடு.இப்போ.. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்ற ஒன்றை மட்டும் காரணம் காட்டி காங்கிரஸ் பக்கம் தாவி விட்டார்.. அதோடு விட்டாரா.. காங்கிரஸ் தரப்பில் இருந்து ராகுல் கூட கொஞ்சம் அமைதியாக தான் இருக்கிறார்.. ஆனால் சந்திர பாபு நாயுடுவோ.... யார் விட்டாலும் நான் விட மாட்டேன் யா என ஒரே பிடியாய் உள்ளார். ஆனால் மோடியோ அவர் கூலாக எப்போதும் போல உலக தரத்துல திட்டங்கள் பற்றியும், பல்வேறு ஒப்பந்தங்கள் பற்றியும் மும்முரமாக உள்ளார்.

இந்த நிலையில் தான் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பங்கு பெற உள்ளன. அதாவது ஒன்று கூடிட்டாங்க பா.. ஒன்று கூடிட்டாங்க..காங்கிரஸ், திமூக, தெலுங்கு தேசம், திரிணமுல் காங்கிரஸ், தேய வாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஸ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, மதசார்பற்ற கட்சி, லோக் தந்திரிக் ஜனதா தளம்

இந்த கூட்டத்தில் 14 கட்சியின் முக்கிய புள்ளிகள் ஒன்றாக சேர்ந்து பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. இந்த கூடத்தில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பின்பு முடிவு செய்யலாம்  என அந்த டாப்பிக்கை ஒரு ஓரமாக வைக்க உள்ளனர். காரணம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால், ஜெயிக்க முடியுமானு அவர்களுக்கே சந்தேகம் எழுந்து உள்ளதால்,  நாளை வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளை வைத்து, அதன் அடிப்படையில் மத்திய மந்திரி சபை அமைக்கலாம் என முடிவு செய்து உள்ளனராம். இது தவிர்த்து, இன்னும் பல வியூகங்கள் தீட்ட திட்டம் போட்டு உள்ளதாம் காங்கிரஸ் கட்சி.

சரி இப்ப முக்கிய விஷயத்திற்கு வரலாம்...

சந்திரபாபு நாயுடு எதற்காக பாஜவில் இருந்து வெளியில் வந்தார்..? காரணம் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்யு அந்தஸ்து கொடுக்கவில்லையே என்பது தான்....அதுவரை ஆஹா ஓஹோ என்றெல்லாம் பாஜக வை பற்றி புகழ்ந்தவர்.. இந்த ஒரு விஷயத்திற்காக மட்டும் கட்சியில் இருந்து வெளியேறி பெரும் கூட்டணிக்கு ஏற்பாடு செய்கிறார்...இதற்கு இடையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நாயுடு பேசும் போது, ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உண்டு என்று கூறினார்.. வாஸ்தவம் தான். இருந்தாலும் அவர் முதல்வரக  வேண்டும் என்று தானே தீயாய் வேலை செய்து வருகிறார்.... 

ஆக.."நான் முதல்ல முதல்வர் ஆகுறேன் அப்புறம் பிரதமர் பற்றி யோசிக்கலாம் என்ற மைன்ட்வாய்ஸ் ஸ்டாலின் கிட்ட இருந்து கேட்கும் போது...அப்போ முதல்வர் வேட்பாளருக்கு ஆயத்தமாகி வருகிறார் சந்திரபாபு நாயுடு என யோசிக்க வைத்து உள்ளது....காங்கிரஸ் தரப்பில் இருந்து ராகுல் காந்தியும் வேண்டாம்.... சரி.. திமுக தரப்பில் இருந்து ஸ்டாலினும்.. ஒரு ஆப்ஷனில் மட்டுமே இருக்கும் போது.. தானாகவே பிரதமர் வேட்பாளார் சந்திரபாபு  நாயுடுவாக தான் இருக்க வாய்ப்பு உள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்...

ஆக இந்த 14 கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணி அமைப்பதன் மூலம் மெகா ஆபரை தட்டி செல்ல திட்டம் போட்டு உள்ளார் சந்திரபாபு நாயுடு..!

முதல் குறி பாஜகவை வீழ்த்த வேண்டும்..அடுத்த குறி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து... அடுத்தது காங்கிரஸ் ராகுலை ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு பிரதமராகுவது.....
ஆக, சந்திரபாபு நாயுடுவுக்கு அடிச்சான் பாரு அபாய்ன்ட்மென்ட் ஆர்டர் என மனதில் ஏதோ உதிக்க தோணும்.. இதற்காக தான் 14 கட்சிகளும் ஓடாய் உழைக்க தயாராகி விட்டனர் என்கிறது  அரசியல் கணிப்பு...

click me!