பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிரடி முடிவு... மாஸ் காட்டும் முதல்வர் எடப்பாடி!

By vinoth kumarFirst Published Dec 10, 2018, 12:54 PM IST
Highlights

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகளுடன் ஒருங்கிணைந்த 181 இலவச தொலைபேசி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமை செயலகத்தில் துவங்கி வைத்தார்.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகளுடன் ஒருங்கிணைந்த 181 இலவச தொலைபேசி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமை செயலகத்தில் துவங்கி வைத்தார். 

பெண்களின் பாதுகாப்புக்காக 181 இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் இருந்து வந்தது. 

இந்நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுப்படுத்தும் நோக்குடன் சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த சேவையை காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

 

இதன் மூலம் குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு 181 இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம். 

இந்த மையத்தை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மனநல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் விவரங்கள், தொலைபேசி எண்கள் 181 மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!