படிக்கிறது ராமாயணம்… இடிக்கிறது பெருமாள்  கோவில் மாதிரி மோடி பேசுவதெல்லாம் நேர்மைய பத்தி …ஆனால் செய்யறதெல்லாம் சட்ட விரோதம்… கொந்தளித்த  முதலமைச்சர்…

Asianet News Tamil  
Published : Jun 01, 2018, 11:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
படிக்கிறது ராமாயணம்… இடிக்கிறது பெருமாள்  கோவில் மாதிரி மோடி பேசுவதெல்லாம் நேர்மைய பத்தி …ஆனால் செய்யறதெல்லாம் சட்ட விரோதம்… கொந்தளித்த  முதலமைச்சர்…

சுருக்கம்

chandra babu naidu told about Modi

பிரதமர் நரேந்திர மோடி பேசுவது எல்லாம் நேர்மையைப் பற்றி என்றும் ஆனால் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக முன்னெடுத்த வழிகள் எல்லாம் சட்ட விரோமானது என ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.  

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான மோதல் காரணமாக மத்திய பாஜக  கூட்டணி அரசியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.

இதைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சரும், , தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு விவகாரத்திலும் பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

இதனிடையே  அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆட்சிக்குவர ஒரு அரசியல் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள், அரசியல் கட்சி பணியை செய்யவில்லை என்றால் மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள் என்றும் . அதுதான்  தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் நடந்துள்ளது என தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், யாராக இருந்தாலும் சரி அனைத்து தலைவர்களும் அவர்களுடைய மாநிலத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார் . பிரதமர் மோடி எப்போது நேர்மையைபற்றி பேசுகிறார். ஆனால் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க அவர்கள் மேற்கொண்டது எல்லாம் சட்டவிரோதமான வழிகள்தான் என குற்றம்சாட்டினார்.

பாஜக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தது.  ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக  நேற்றையை இடைத்தேர்தல்கள் முடிவில் தோல்வியை தழுவியது மக்களின் உணர்வின் எதிரொலிதான் எனவும் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அஜித் பவாருக்குப் பிறகு NCP தலைவர் யார்..? மகாயுதி கூட்டணி தொடருமா..? மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!
அஜித் பவாருக்கும், சுப்ரியா சுலேவுக்கும் என்ன உறவு..? அரசியல் குடும்பத்தின் பின்னணி..!