ஆளுநர் - பெண் ரிப்போர்ட்டர்..! "கன்னத்தில் கை வைத்த நேரம் முதல் எஸ்வி சேகர் கைது வரை...!

First Published Jun 1, 2018, 8:20 PM IST
Highlights
whether sv sekar will arrest by police ?


ஆளுநர் - பெண் ரிப்போர்ட்டர்..! "கன்னத்தில் கை வைத்த நேரம் முதல் எஸ்வி சேகர் கைது வரை...!

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு தொடர்பு உள்ளது என சந்தேகத்தை ஏற்படுத்திய அடுத்த நாளே அவசர அவசரமா செய்தியாளர்களை ராஜ் பவனுக்கு அழைத்தார் ஆளுநர்

அப்போது காவிரி பிரச்சனை ரொம்ப சூடாக பேசப்பட்டு வந்தது....அதை விட மிகவும் சூடான டாப்பிக்காக நிர்மலா தேவி விவகாரம் இருந்தது ...

பின்னர் ராஜ் பவனில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், செய்தியாளர்கள் கேட்ட காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கேள்விக்கும், நிர்மலா தேவி விவகாரம் குறித்தும் பதில் அளித்து வந்தார்

கன்னத்தில் கை வைத்த நேரம்..

செய்தியாளர் சந்திப்பு முடிவில், அங்கிருந்த ஒரு பெண் ரிப்போர்ட்டர் ஒருவரின் கன்னத்தை தட்டிவிட்டு சென்றார்...

அதற்கு அனைத்து பத்திரிக்கையாளர்களும் கண்டனம் தெரிவித்தனர். மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பன்வாரிலால், அந்த பெண் செய்தியாளர் மிக நன்றாக கேள்விகள் கேட்டார்.... நானும் 40 ஆண்டு காலமாக பத்திரிக்கையில் இருக்கிறேன்...எனக்கு தெரியும்... என தெரிவித்து, அந்த பெண்ணை பாராட்டி தான் கன்னத்தில் தட்டினேன் என விளக்கம் அளித்து  இருந்தார்....மேலும் மன்னிப்பும் கேட்டார்

பெண் நிருபர் சொன்னது என்ன...?

ஆளுநரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அவர் கூறும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், "என் கன்னத்தை எத்தனை முறை கழுவினாலும் அது நீங்காது என தெரிவித்து இருந்தார்...

உள்ளே நுழைந்த எஸ்வி சேகர்

ஆளுநரின் விளக்கத்திற்கு கொஞ்சம் ஓவாரா ரியாக்ட் செய்த பெண் நிருபரின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில்...."அந்த பெண் நிருபரின் கன்னத்தை  தொட்டதற்கு ஆளுநர் தான் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் எனவும்... தலைமை பொறுப்பில் உள்ள எந்த ஒரு நபரும் எப்படி மேல வந்தாங்க என்று தெரியும் என தரக் குறைவாக எழுதி எஸ்வி சேகர் சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது தீயா பரவ,,, செய்தியாளர்கள் கொந்தளிக்க.. அதில் ஒரு சிலர் எஸ் வி சேகரை கைது செய்ய வேண்டும் என பல காவல் நிலையத்தில் புகார் அளிக்க.....மேலும் அவர் வீட்டு முன்  போராட்டம்  நடத்தி, கல் வீசவும் செய்தனர்.....

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் மீது எஸ்வி சேகர் புகார் தெரிவிக்க...அந்த கேஸ் ஒரு பக்கம் இருக்கு......

ஆனால் எந்த பெண் நிருபருக்காக மற்ற செய்தியாளர்கள் போராடினார்களோ அந்தபெண் அதற்கு பின், ஒரு எதிர்ப்பை கூற தெரிவிக்கவில்லை.. அந்த பெண்ணிற்காக மற்ற செய்தியாளர்கள் மட்டுமே போராடி அவர்கள் மீது கேஸ் கூட பைல் செய்யப்பட்டு உள்ளது.. அதுதான் வேடிக்கை...

இப்போது வரை கைது செய்யப்படாத எஸ்வி சேகர்..

பல பத்திரிக்கை சங்கங்கள் எஸ்வி சேகர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்ததால், அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது....எப்படியும் கைது செய்யப் படுவார்கள் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படவே..முன்ஜாமீன் கோரினார் எஸ்விசேகர்...

உச்ச நீதிமன்றத்தை நாடிய எஸ்வி சேகர், முன்ஜாமீன் கேட்க, எஸ்வி யை கைது செய்ய, இன்று வரை இடைக்கால தடை விதித்து இருந்தது உச்சநீதிமன்றம்.

இனி மேலாவது, போலீசார் அவரை கைது செய்வார்களா என்றால்... யாரும் மூச்சு பேச்சு விடாமல் இருக்காங்க.....

அதற்கு முன்னதாக ...

எஸ்வி சேகர் சமீபத்தில் பிரதமர் மோடியை குடும்பத்துடன்  நேரில் சந்தித்து  வாழ்த்து வாங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....

குறிப்பு:

ஆளுநர் பெண் நிருவர் கன்னத்தில் எந்த நேரத்தில் கை வைத்தாரோ தெரியவில்லை.. விடாது கருப்பு போல... சம்மந்தமே இல்லாம மற்ற செய்தியாளர்கள் மட்டுமே இதில் மாட்டிக்கொண்டார்கள்...இதில் சம்மந்தப்பட்ட பெண் அவர் வேலையை ஹாயாக பார்த்து வருகிறார்.... மற்றொன்று, புகார் என்னவோ ஆளுநர் மீது தான்... ஆனால் நடுவில் புகுந்த எஸ்வி சேகர் சும்மா இல்லாமல் மாட்டிக் கொண்டார்......

இது தான் சங்கதி.....

click me!