
ரஜினி ஒரு முறை தான் சொன்னாரு....மற்றவங்க100 முறை சொல்லிட்டாங்க..."அந்த ஒரே ஒரு சொல்"
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைப்பெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்ததில் 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர்
பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை காண நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்றார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் சமூக விரோதிகள் என தெளிவாக கூறினார்.
சமூக விரோதிகள் ஊடுருவல் காரணமாகத்தான் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்துள்ளது என தெரிவித்து இருந்தார்...
சமூக விரோதிகள் தான் காரணம் என சொன்ன ரஜினி, யார் அந்த சமூக விரோதிகள் என சொல்ல வில்லை...ஆனால் அதற்குள், ரஜினி பேசிய வார்த்தைக்கு ரோஷம் அடைந்த சில குறிப்பிட்ட அரசியல் வாதிகள்...கண்டனம் தெரிவித்தனர்....
அதில் நாம் தமிழர் கட்சி சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டி டிவி தினகரன் , திமுக செயல் தலைவர் ஸ்டாலின் (குறிப்பு : ரஜினி சமூக விரோதிகள் என்று தான் சொன்னார்.... இதனை எதிர்த்து கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்..." போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தீவிரவாதி என கூறுகிறார் ரஜினி என மாற்றி தெரிவித்து இருந்தார்) இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரஜினி பேசும் போது, போலீசாரை அடித்தது மிகவும் தவறு... ஆனால் அடித்தது மக்கள் இல்லை... சமூக விரோதிகள் என்று தெளிவாக கூறி உள்ளார்....
ஆனால் மற்ற அரசியல் தலைவர்கள், போராட்டம் செய்பவர்கள் சமூக விரோதிகள் என கூறுகிறீர்களே என வைகோ உட்பட பலரும் வேறுவிதமாக பேச தொடங்கி விட்டனர்...
இதில் என்ன வேடிக்கை என்றால், ரஜினி ஒரே ஒரு முறை மட்டும் தான் சமூக விரோதி என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
ஆனால் மற்றவர்கள் 100 தடவை திரும்ப திரும்ப ..ரஜினி இப்படி சொன்னாரே சொன்னாரே என்று...சமூக விரோதிகள் என்ற வார்த்தையை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்...
மாரல்: நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி.....