இப்போதே தொடங்கிவிட்டது குழப்பம் ..! பிரதமர் யாருன்னு இன்னும் தெரியல.. சந்திரபாபு நாயுடு புது பிளான்..!

Published : May 11, 2019, 05:46 PM ISTUpdated : May 11, 2019, 05:55 PM IST
இப்போதே தொடங்கிவிட்டது குழப்பம் ..! பிரதமர்  யாருன்னு இன்னும் தெரியல.. சந்திரபாபு நாயுடு புது பிளான்..!

சுருக்கம்

பாஜக விற்கு எதிராக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று தங்களுக்குள் கூடி பேசி பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்வோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  

பாஜக விற்கு எதிராக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று தங்களுக்குள் கூடி பேசி பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்வோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஒரு மாற்று அணியை கொண்டுவரவேண்டுமென சந்திரபாபு நாயுடு முழு முயற்சி எடுத்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே ஒரு மாற்று அணி உருவாகி வருகிறது என்பதை பாஜகவிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என இப்போதே மும்முரமாக செயல்பட்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு.

இதற்கிடைப்பட்ட நேரத்தில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எங்கள் கூட்டணி கட்சியில் உள்ள அனைவரும் மோடியை விட சிறந்தவர்கள். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் எங்கள் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து கூடிப்பேசி பிரதமரை முடிவு செய்வோம் எனக் குறிப்பிட்டார்.

மேலும் மம்தா பானர்ஜி பிரதமராக முன்னிறுத்த படுவாரா என்ற கேள்விக்கு இது குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதேவேளையில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டு பேசினார்.

இதற்கு முன்னதாக மெகா கூட்டணி அமைத்த போது, இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சியை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி வந்தாலே கூட்டணி காட்சிகள் முறிந்துவிடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதற்கு ஏற்றவாறு தற்போது, எதிர்க்கட்சியை பொறுத்தவரை பிரதமர் யார் என்ற தேர்வுக்கு சந்திரபாபு நாயுடு மும்முரம் காட்டி வருகிறார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!