
மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது உங்களது கட்சியின் கொள்கையாக இருக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு வாழ்த்துச் சொன்னதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். காலை 7.35 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்துக்கு சென்ற கமல், அவரின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அப்துல் கலாமின் குடுப்த்தினர் கமலுக்கு வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து அப்துல் கலாம் படித்த பள்ளியில் உள்ள மாணவர்களை சந்தித்து உரையாட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு அரசு அனுமதி அளிக்காததால் அத்திட்டத்தை ரத்து செய்தார்.
இது கமலுக்கும், அவரது ரசிகர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி முன்பு சிறிது நேரம் நின்று வணங்கிவிட்டு தனியார் விடுதிக்கு சென்ற கமலஹாசன், அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மீனவர்களையும், மீனவ பிரநிதிகளையும் சந்தித்து உரையாடினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது பேசிய கமல்ஹாசன், மதுரையில் எனது கொள்கைகள் புரியும் வகையில் பேசுவேன என்று சொல்லி சிரித்தார்.. கொள்கை என்பதை விட மக்களுக்கு செய்ய போவதே முக்கியம் என்று கூறிய அவர். நேற்று இரவு சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் அப்போது. மக்கள் பிரச்னைகளை பட்டியலிடுங்கள், அதையே கொள்கைகளாக மாற்றி மக்களுக்கு சேவை செய்யுங்கள் என அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார்.
சந்திர பாபு நாயுடு ஒரு செயல் வீரர் என்றும் தனது ஆதர்ஷ தலைவர் சந்திர பாபு நாயுடுதான் என்றும் கூறிய கமல், அவர் நேரம்அ கிடைக்கும்போது தன்னை நேரில் சந்திக்க உள்ளதாக கூறியதையும் தெரிவித்தார்.