சந்திரயான் – 2 தோல்விக்கு இவர் தான் காரணம் ! அதிரடியாக குற்றம்சாடிய குமாரசாமி !!

By Selvanayagam PFirst Published Sep 14, 2019, 10:08 AM IST
Highlights

சந்திரயான் – 2  விண்கலம் நிலவில் தரையிரங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்க்க வந்நதால்தான் அத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, கடந்த வாரம்  சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நடந்தது. இதை காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்தார். அவர் வந்தது நிலவில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதை பார்ப்பதற்காக அல்ல. இதையும் ஒரு பிரசாரமாக பயன்படுத்திக் கொள்ளத்தான் பிரதமர் நரேந்திர மோடி எண்ணினார் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் இஸ்ரோவில் கால் வைத்த நேரம் அங்கிருந்த விஞ்ஞானிகளுக்கும், சந்திரயான்-2 விண்கலத்திற்கும் அபசகுனம் ஏற்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை. அதனால்தான் விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்கவில்லை. 

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு தோல்வி அடைந்ததற்கு மோடியின் வருகைதான் காரணம். அவர் இஸ்ரோவுக்கு வராமல் இருந்திருந்தால் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கும்.

நாட்டில் உள்ள பிரச்சினைகளையும், நிவாரண நிதிகளையும் கொடுக்க முடியாத பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார். மோடியின் முன்பு பேசுவதற்கே கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பயப்படுகிறார்கள் என குமாரசாமி தெரிவித்தார்.

click me!