
கடவுளையே நகைப்புக்குரியவராக மாற்றிக் காட்டக்கூடிய தமிழகத்தில் பிரதமரின் நல்ல நோக்கத்தை யார் புரிந்து கொள்ளப்போகிறார்கள் என்றும், தமிழ்நாட்டை அழிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் வரக்கூடாது.
ஏற்கெனவே இருக்கின்ற தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று சொன்னால், இங்கு வேலைவாய்ப்பே இல்லாத நிலை உருவாகும்.
தமிழகத்தில் எந்தவிதமான தொழில் முன்னேற்றமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு பெரிய இயக்க்ததை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தொழில் முன்னேற்றம் இல்லாத நிலையில் அது தமிழகத்துக்கு பெரிய ஆபத்தை உண்டாக்கும். ஏற்றுமதி முதற்கொண்டு எல்லா வகையிலும் அது பாதிப்பை
ஏற்படுத்தும். அரசியல் கட்சிகள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
ஆளும் அரசு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வளர்ச்சி என்பதை அடுத்த தலைமுறையையும், ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் வைத்தே
பார்க்க வேண்டும்.
பிரதமர் மோடியின் பிட்னஸ் சேலஞ்ச் வீடியோ பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, கடவுளையே நகைப்புக்குரியவராக மாற்றிக் காட்டக்கூடிய தமிழ்நாட்டில், பிரதமர் மோடியின் நல்ல நோக்கத்தை யார் புரிந்து கொள்ளப்போகிறார்கள்.
தமிழ்நாட்டை அழிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களது நோக்கமே யாரும் எந்தவொரு நல்ல விஷயத்தையும் பார்த்துவிடக் கூடாது என்பதுதான். எனவே அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று பொன்னார் கூறினார்.