சரக்கு இல்லாத காலி டப்பா... திமுக கூட்டணியைத் தெறிக்கவிட்ட பொன்னார்!

By Asianet TamilFirst Published Mar 4, 2019, 6:54 AM IST
Highlights

பார்ப்பதற்குத்தான் திமுக கூட்டணி பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், அந்தக் கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பாவாகத்தான் காட்சியளிக்கிறது

திமுக கூட்டணியைச் சரக்கு இல்லாத காலி டப்பா என தமிழக பாஜக மூத்தத் தலைவரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.


அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாகர்கோவில் வந்த  பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக கூட்டணியை சரக்கு டப்பாவுடன் ஒப்பிட்டு பேசினார்.
பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் கூறியது:
 “பாஜக கூட்டணியிலிருந்து விலகி ஐஜேகே கட்சி திமுக அணியில் இணைந்திருப்பதால், எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.  பார்ப்பதற்குத்தான் திமுக கூட்டணி பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், அந்தக் கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பாவாகத்தான் காட்சியளிக்கிறது. குமரியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், மதச்சார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய சம்பத், மீண்டும் அரசியலுக்குள் வந்திருப்பதால், தமிழக மக்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சருக்கு எதுவும் தெரியாது எனக் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. தெரிய வேண்டிய அனைவருக்கும் அது தெரிந்திருக்கிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவத்தில், பாஜக அரசியல் செய்வதாக கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

click me!