இறங்கி வராத ஸ்டாலின்... செய்வதறியாமல் திணறி நிற்கும் திருமா!!

By sathish kFirst Published Mar 3, 2019, 8:50 PM IST
Highlights

விசிகக்கு 2 சீட்டுகள் ஒதுக்குவதால், திமுகவுக்கு 20 தொகுதிகளில் ஜெயிக்க முடியும் ஆனால் இதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுக்கிறாராம்.

திமுகவோடு கூட்டணிக்கு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது விசிக, மதிமுக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட்கள். அனால், இன்னும் பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று  ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் திருமா. 

அந்த சந்திப்பில், சிறுத்தைகளுக்கு 1 சீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.  ஏற்கனவே இதைத்தான் திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்திருப்பதாக சொன்ன திருமா, ஒரு சீட்  என்பதை கட்சியினர் ஏற்க மாட்டார்கள். 2 சீட் ஒதுக்குங்கள் என வலியுறுத்தினார். 2 சீட் கொடுத்தால் மட்டுமே திமுக - விசிக கூட்டணியும் உறவும் எந்தளவுக்கு வலிமையாகும் என்பதையும் தெரிவித்திருக்கிறார் திருமா. 

ஆனாலும், 1 சீட் என்பதிலேயே உறுதியாக இருந்தாராம் ஸ்டாலின். இதனால், வருத்தத்துடன் எழுந்த திருமா, கட்சியினருடன் விவாதித்து விட்டுச் சொல்கிறேன்  என தெரிவித்துவிட்டு ஸ்டாலினின் வீட்டிலிருந்து  கிளம்பினாராம்.

ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விவாதித்தார் திருமா. அதைக்கேட்டு விசிக ஏகத்துக்கும் வருத்தப்பட்டனர். 

கடந்த 2009 மற்றும் 2014  ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் சிறுத்தைகளுக்கு 2 சீட்டுகள் ஒதுக்கிய திமுக, இப்போ வெறும் 1 சீட் என்பது எந்த விதத்தில் நியாயம்? விசிகக்கு 2 சீட்டுகள் ஒதுக்குவதால், திமுகவுக்கு 20 தொகுதிகளில் ஜெயிக்க முடியும் ஆனால் இதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுக்கிறாராம்.

நேற்று அறிவாலயத்தில் இருந்து விசிகவுக்கு, ‘நாளை பகலில் அறிவாலயத்துக்கு தொகுதிப் பங்கீடு குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த வாங்க என அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இன்று திருமாவளவன் அறிவாலயத்துக்கு செல்லவில்லை.  

click me!