'எங்களால தமிழகம் முழுவதும் உங்களுக்கு லாபாம்..? ஆனா எங்களுக்கு இவ்வளவுதானா..?' ஸ்டாலினிடம் சீரிய திருமா..!

By Thiraviaraj RMFirst Published Mar 3, 2019, 5:48 PM IST
Highlights

அதிமுக கிட்டத்தட்ட கூட்டணியை முடிவு செய்து விட்டது. ஆனால் திமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. 

அதிமுக கிட்டத்தட்ட கூட்டணியை முடிவு செய்து விட்டது. ஆனால் திமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. 

மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆரம்ப காலம் தொட்டே திமுகவுடன் தோழமை கட்சிகளாக இருந்து வந்தாலும் அந்தக் கட்சிகளுக்குள் தொகுதிகளை ஒதுக்குவதில் முரண்பாடுகள் நீடித்து வருகிறது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்னும் கூட்டணியை உறுதி படுத்தவில்லை திமுக. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், கொங்கு மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ஒரு சீட் கொடுத்ததோடு மற்ற தோழமைக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.

 

விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள் கட்சிகளுடன் இழுபறி இன்னும் நீடித்து வருகிறது. இன்றும் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அந்த சந்திப்பில், சிறுத்தைகளுக்கு ஒரு சீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். 

ஆனால் அதனை ஏற்காத திருமா, ‘’ஏற்கனவே ஒரு சீட் தருவதாகத்தான் திமுகவின் பேச்சுவார்த்தை குழு எங்களிடம் கூறியது. அதனை நாங்கள் ஏற்கவில்லை. இப்போது மீண்டும் அழைத்து ஒரு சீட்டு தான் எனக் கூறினால் அதை எப்படி ஏற்பது? ஒரு சீட் என்பதை எங்கள் கட்சியினர் ஏற்க மாட்டார்கள். 2 சீட் ஒதுக்குங்கள் எனக் கேட்டிருக்கிறார் திருமா. அதனை ஏற்றுக்கொள்ளாத ஸ்டாலின் ஒரு சீட் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் "கட்சியினருடன் விவாதித்து விட்டுச் சொல்கிறேன்" என மு.க.ஸ்டாலினிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டார். 

இது குறித்து  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறும்போது, " 2009, 2014 மக்களவை தேர்தலில் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக இரு தொகுதிகளை ஒதுக்கியது. இப்போது மட்டும் 1 தொகுதியை மட்டுமே ஒதுக்குவதாக கூறுவதை எப்படி ஏற்பது? எங்கள் கூட்டணியால்  திமுகவுக்கு தமிழகம் முழுவதும் லாபம். இதனை திமுக உணர மறுக்கிறது. இதனால் திருமாவளவன் வருத்தத்தில் இருக்கிறார்’’ எனக் கூறுகிறார்கள் அவர்கள். 

click me!