எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் இல்லை..!! மத்திய சுகாதாராத்துறை அறிவுரை..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 17, 2020, 3:21 PM IST
Highlights

வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கூட பலர் மாஸ்க் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது . பல இடங்களில் மாஸ்க் தட்டுப்பாடு உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என  மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது .

கொரோனா அச்சத்தால் எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை ,  கொரோனா  நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே அணியலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது . கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளியிட்டுள்ள 15 அம்ச அறிவுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது .  சீனாவில் தோன்றிய  கொரோனா வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது .   இதுவரை உலக அளவில் இந்த வைரசுக்கு  7,200 பேர் உயிரிழந்துள்ளனர் .   உலக அளவில் ஒரு லட்சத்தில் 30 ஆயிரத்துக்கும்  அதிகமானோருக்கு இந்த வைரஸின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் பல்வேறு நாடுகளில் கொரோனாவை  தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தி வருகின்றன. 

இந்தியாவையும்  இந்த வைரஸ் விட்டுவைக்கவில்லை ,   இந்தியாவும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது .  இந்த வைரசை கட்டுப்படுத்த 15 அம்ச அறிவுரைகளை மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது .   அதில் கல்வி நிறுவனங்கள் உடற்பயிற்சி கூடங்கள் ,  நீச்சல் குளங்களை  மூடுவது பொதுமக்கள் தேவையில்லாமல் பஸ்கள் ரயில்கள் விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன .   அதேபோல் கொரோனா பரவும் பகுதிகளில் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் பரவலாக மக்களிடையே அச்சம் நிலவுகிறது.   வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கூட பலர் மாஸ்க் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது .  பல இடங்களில் மாஸ்க் தட்டுப்பாடு உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. 

ஆனால் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என  மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது .   இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த  மத்திய சுகாதாராத்துறை டுவிட்டரில் தெளிவான விளக்கப்படம் வெளியிட்டுள்ளது .   எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை இருமல் காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறி ஏற்பட்டால் மட்டுமே  மாஸ்க் அணிய வேண்டும் . கொரோனா  வைரஸ் உறுதி செய்யப்பட்டாலோ ,  தொடர்பான தாக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டால் மாஸ்க் அணிய வேண்டும் .   அதேபோல் சுவாசப் பிரச்சனை  உள்ள நோயாளிகளை கவனிக்கும் சுகாதார ஊழியர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது .   அதேபோல் எப்படி மாஸ்டர் பயன்படுத்த வேண்டும் என்பது விளக்கமாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

click me!