ஜிஎஸ்டி வரி தொகையை வழங்குவதில் தமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு!!

Published : Jan 01, 2023, 09:43 PM IST
ஜிஎஸ்டி வரி தொகையை வழங்குவதில் தமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு... வைகோ பகிரங்க குற்றச்சாட்டு!!

சுருக்கம்

ஜிஎஸ்டி வரி தொகையை வழங்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்வதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 

ஜிஎஸ்டி வரி தொகையை வழங்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் ஆளும் மோடி அரசு பாஜனதாவின் ஒவ்வொரு அஜன்டாவையும் நிறைவேற்றி வருகிறது.

இதையும் படிங்க: 34 ஐஏஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

காஷ்மீரில் 370வது சட்ட பிரிவை நீக்கினார்கள். புதிய கல்வி கொள்கையை உருவாக்கி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்த பார்க்கிறார்கள். தமிழக கவர்னரும் சனாதன சக்திகளின் ஏஜெண்டாக இருந்து புதிய கல்வி கொள்கையை ஆதரித்து பேசுகிறார். தமிழையும், திருக்குறளையும் பேசி மக்களை ஏமாற்றி விட முடியாது.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்… குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் அறிவித்ததை அடுத்து முடிவு!!

சமூக நீதியையும், மதசார்பற்ற தன்மையையும் சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தொகையை வழங்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. சகோதரர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இந்தியாவில் சிறந்த ஆட்சியாக பாராட்டப்படுகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எந்த முயற்சியும், போராட்டமும் எடுபடாது என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!