ஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் தண்டனை..!! இனி யாராவது வெளியில் போக நினைப்பீங்க..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2020, 5:44 PM IST
Highlights

முன்னதாக விதிகள் மற்றும் சட்டங்களை செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை  உறுதி செய்யுமாறு பிரதமர் மாநில அரசியலுக்கு உத்தரவிட்டுள்ளார்.  அதாவது ஊரடங்கு உத்தரவை பலர் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை ,  

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 6 மாத சிறை ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது .  சீன வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை அனைத்து மாநில மக்களும் தவறாமல்  கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்தது .  ஆனால் பொதுமக்கள் இதை முறையாக கடை பிடிக்க வில்லை என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கவலை தெரிவித்துள்ளார்.   இந்நிலையில் கண்டிப்பான ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது .  ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது உத்தரவை மீறுபவர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனை அல்லது இந்திய தண்டனைச் சட்டம் 188-ன்படி ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .  அதேநேரத்தில் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது .  முன்னதாக விதிகள் மற்றும் சட்டங்களை செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை  உறுதி செய்யுமாறு பிரதமர் மாநில அரசியலுக்கு உத்தரவிட்டுள்ளார்.  அதாவது ஊரடங்கு உத்தரவை பலர் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை ,  தயவுசெய்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் வழிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றுங்கள் . என்ற பிரதமர்,  விதிகள் மற்றும் சட்டங்கள் அமல்படுத்துவதை உறுதி செய்ய மாநில அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . 

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கட்கிழமை காலை  6  மணி முதல் 31ஆம் தேதி நள்ளிரவு வரை கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.  இந்நிலையில் மகாராஷ்டிரா ,  கர்நாடகா ,  மத்திய பிரதேசம் ,  ராஜஸ்தான் ,   பஞ்சாப் ,  பீகார் ,  ஜார்கண்ட் , ஒடிசா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சமூக பரவல் வழியாக சீன வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் மாத இறுதிவரை முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன இந்நிலையில் தேசிய தலைநகரின் எல்லைகள் சீல் வைக்கப்படும் என்றும் இருப்பினும் சுகாதாரம் ,  உணவு ,  நீர் ,  மற்றும் மின்சாரம் தொடர்பான அத்தியாவசிய சேவைகள் தொடரும் ,  மேலும் 25 சதவீத டிடிசி பேருந்துகள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொருட்களை கொண்டு செல்ல இயங்கும் எனக்கு கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார் . 
 

click me!