மருத்துவராக கூறுகிறேன்.. மேட்டர் ரொம்ப சீரியஸ்.. புரிஞ்சுக்கோங்க..! தொடர்ந்து மன்றாடும் மருத்துவர் அன்புமணி..!

By Manikandan S R SFirst Published Mar 23, 2020, 5:29 PM IST
Highlights

அண்டை மாநிலங்களில் அதிகளவில் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதாக கூறுவதை மருத்துவராக தான் மறுப்பதாக அன்புமணி தெரிவித்திருக்கிறார். உண்மையாக பாதிப்பு குறைவாக இருந்தால் மகிழ்ச்சி என்றும் ஆனால் மக்களிடம் பீதியை கிளப்ப வேண்டாம் என நினைத்து அரசு எதையும் மறைக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. 415 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் 8 பேர் பலியாகி இருக்கின்றனர். தமிழகத்தில் தற்போது வரை 7 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் தமிழ்நாட்டில் 3 வார காலத்திற்கு முழு அடைப்பை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு தொடர்ந்து அறிக்கை மற்றும் காணொளி வாயிலாக வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனமான பாலிமர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருந்த சிறப்பு பேட்டியில், கொரோனா வைரஸ் குறித்து தமிழக மக்களுக்கு இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்றும் உலகநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் கொரோனா குறித்து இருக்கும் விழிப்புணர்வு எதுவும் தமிழகத்தில் இல்லை என்றார். குறிப்பாக சென்னையில் மக்கள் ஒன்றும் நடக்காதது போல கூட்டமாக சென்று வருவதாக கூறியிருக்கும் அன்புமணி, கொரோனா வைரஸ் மற்ற சாதாரண வைரஸ்களை போன்று கிடையாது, இது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

"

அண்டை மாநிலங்களில் அதிகளவில் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதாக கூறுவதை மருத்துவராக தான் மறுப்பதாக அன்புமணி தெரிவித்திருக்கிறார். உண்மையாக பாதிப்பு குறைவாக இருந்தால் மகிழ்ச்சி என்றும் ஆனால் மக்களிடம் பீதியை கிளப்ப வேண்டாம் என நினைத்து அரசு எதையும் மறைக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இப்போது இருக்குற சூழலில் மக்கள் பீதியடைய வேண்டும். அச்சப்பட வேண்டும் இல்லையெனில் சீனா,இத்தாலியை விட மோசமான நிலையை இந்தியா சந்திக்கும் என்று, எச்சரித்துள்ளார்.

நன்றி: பாலிமர் தொலைக்காட்சி

click me!