மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக சொல்லியிருக்காங்க.. முதல்வர் பசவராஜ் பொம்மை சொன்ன அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 9, 2021, 7:32 PM IST
Highlights

மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நான் டெல்லி சென்றபோது மத்திய அரசு இதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தனர். விரைவில் டெல்லி செல்ல உள்ளேன்.

மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக அரசு காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க தமிழகத்திலுள்ள சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் குறுக்கே மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி சென்று ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர். அப்போது மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.  இந்நிலைளில், மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக மத்திய அரசு கூறியதாக கர்சாடக முதல்வர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டியளிக்கையில்;- மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நான் டெல்லி சென்றபோது மத்திய அரசு இதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தனர். விரைவில் டெல்லி செல்ல உள்ளேன். மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் தற்போதைய நிலவரம் குறித்த விரிவாக விளக்குவேன் என தெரிவித்துள்ளார். 

மேலும், தண்ணீரில் எங்கள் பங்கைப் பெறுவதற்காகவும், தடுப்பணை கட்டுவதற்காகவும் நடத்தப்பட வேண்டிய சட்டப் போராட்டம் குறித்து நீர்வளத்துறை அமைச்சருடனும் வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார். 

click me!