வீட்டில் நகை வைத்துள்ளவர்கள் எச்சரிக்கை..!! ரசீது இருந்தால் தங்கம் தப்பிக்கும், இல்லைனா அம்பேல்தான்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 1, 2019, 12:33 PM IST
Highlights

 இதற்கு காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்பு பணம் வைத்திருந்தவர்கள்,  அதை தங்கத்தில் முதலீடு செய்து தங்கமாக மாற்றிக் கொண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 

வீடுகளில் ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது  பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மத்தியில் மோடி பதவி ஏற்ற பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அது மிகப்பெரிய  அளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.  இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போலவே,  ரசித்து இல்லாமல் மக்கள் வீடுகளில் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரியை வசூலிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. 

கள்ளப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி பணமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதேபோல தங்கம் பதுக்கலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது, கணக்கில் வராத தங்கம் வைத்திருக்கும் நபர்கள்.  தாங்களாகவே முன்வந்து அவற்றின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் அப்படி முன்வந்தால் குறைந்தபட்ச அபராதத்தை விதிக்கவும், அல்லது வரம்பு மீறி தங்கம் வைத்திருப்பதை கண்டு பிடித்தால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இதற்கு காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்பு பணம் வைத்திருந்தவர்கள்,  அதை தங்கத்தில் முதலீடு செய்து தங்கமாக மாற்றிக் கொண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

 

இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள 151 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது ஆனால் அந்த தகவலை அது மறுத்துள்ளது.  இந்நிலையில் ரிசர்வ் வங்கி வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு 1.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் நடுத்தர மக்கள் மத்திய அரசு கொண்டுவரவுள்ள இந்த திட்டத்தின் மூலம் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

click me!