"அழு, எனதருமை நாடே" பணமிருந்தும் மக்களை காப்பாற்றாத அக்கறை காட்டாத மத்திய அரசு.! ப.சிதம்பரம் காட்டம்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2020, 9:21 PM IST
Highlights

"அழு, எனதருமை நாடே" என்று கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.பாஜக அரசு மக்களை வீட்டிற்குள் முடங்க சொல்லியிருக்கிறது.ஆனால் அரசு கஜனாவில் இருக்கும் பணத்தில் 65ஆயிரம் கோடியை மக்களுக்காக பயன்படுத்தலாம். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வங்கிகளில் செலுத்தலாம்.இது உங்களுக்கு புரியவில்லையா..? மோடி என்று கூட பேசி பார்த்தார் சிதம்பரம்.

T.Balamurukan

மத்திய அரசு இவரின் கணக்கை எட்டி உதைத்துவிட்டது.பாஜகவிற்கு மீண்டும் 2வது முறையாக வாய்ப்பு கொடுத்தீர்கள் அதற்காக நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்பது போல் இருக்கிறது அவர் பதிவு.

கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில், "அழு, எனதருமை நாடே" என்று கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முன்னாள் மத்தியஅமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்..,

இந்த ஊரடங்கு நாட்களில் உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். பணம் இருக்கிறது; உணவு இருக்கிறது; ஆனால் அரசு இரண்டையுமே வழங்குவதில்லை. அழு, எனதருமை நாடே!

நிதியுதவி தொடர்பான முதல்வரின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. கடந்த 25-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் ஒரு ரூபாய் கூட சேர்க்கப்படவில்லை.பிரதமரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்தி நாமும் எதிரொலிக்கலாம். ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த முடிவை நாம் ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

click me!