இந்த பட்ஜெட்டில் உருப்படியானது இந்த ஒண்ணு மட்டும் தான்... திமுக எம்.பி.கனிமொழி..!

By vinoth kumarFirst Published Feb 2, 2020, 3:00 PM IST
Highlights

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி கலந்துகொண்டு முதலில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்த அறிவிப்பு மட்டும்தான் மத்திய அரசின் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி கலந்துகொண்டு முதலில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி;- மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக மக்கள் தானாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சட்டத் திருத்த மசோதாவினால் ஏற்படும் பாதிப்புகளைக் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கும் விதமாக, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

மேலும், பேசிய கனிமொழி ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி, அருங்காட்சியகம் குறித்த அறிவிப்புகள் மட்டும்தான் மத்திய அரசின் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்கது அதைத் தவிற வேறு எதுவும் வரவேற்கும் விதமாக இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் தெளிவாக இல்லை. எல்ஐசி தனியாருக்கு தாரைவார்க்ப்படும் என்றபோது நாடாளுமன்றமே அதிர்ந்துபோனது. மக்கள் நம்பக்கூடிய, அதிகம் சார்ந்து இருக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிச்சயமாக ஏற்க முடியாது. குறைந்தபட்சம் மத்திய அரசு இதையாவது திரும்பபெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

click me!