தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை .. ?

By Ezhilarasan BabuFirst Published Apr 13, 2021, 4:00 PM IST
Highlights

தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளில் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் தற்போது பெற்று வருகின்றனர். 

ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக ரேஷன் கடைகளில் அளவு குறைக்கப்பட்டதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது மேலும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்ட மண்ணெண்ணை அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.  தற்போது மாநிலத்தின் மொத்த தேவையில் 20% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. 

தற்போது குறைக்கப்பட்டுள்ள மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார்கள் பெறப்படுவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்ணெண்ணெய் பெற தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து அனைத்து நியாயவிலை கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

click me!