இது விளையாட்டு சமாச்சாரம் இல்லை.. மாணவர்களின் உயிர் முக்கியம்.. CBSE தேர்வை கேன்சல் பண்ணுங்க.. முதல்வர் அதிரடி

By vinoth kumarFirst Published Apr 13, 2021, 3:39 PM IST
Highlights

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார். 

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  கோரிக்கை வைத்துள்ளார். 

கொரோனாவின் 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. நாள் ஒன்று 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதோடு தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாகி வருகிறது. இதனிடையே, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டு என எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலும் சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- டெல்லியில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். ஒரு லட்சம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தற்போதைய சூழலில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பாக இந்த தேர்வு அமைந்துவிடும். 

குழந்தைகளில் வாழ்வும், ஆரோக்கியமும் முக்கியமானவை. இம்முறை பரவி வரும் கொரோனா தொற்று மிகவும் ஆபத்தானது. கடந்த 10 - 15 நாள்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவிகிதம் 45 வயதுக்கு குறைவானவர்கள். ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். தற்போது பரவி வரும் வைரஸ் இளைஞர்களை தான் அதிகம் தாக்கி வருகிறது' என தெரிவித்துள்ளார்.

click me!