மத்திய பாஐக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.. திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்.. மா.சு அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 22, 2021, 2:14 PM IST
Highlights

இதன் அடிப்படையில் விருகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில்  வசிக்கும் ஆயிரம் பேருக்கு, கபசுரக் குடிநீர், ஒரு நபருக்கு தலா 5 முக கவசம், பிஸ்கெட், சோப்பு உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார். 

திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏம்.எம்.வி.பிரபாகர் ராஜா ஏற்பாட்டில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை படி,
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர், சத்யா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்களை, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி வழங்கினார்.

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன்: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் கொரோனா தற்காப்பு உபகரணங்களை திமுக சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் விருகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில்  வசிக்கும் ஆயிரம் பேருக்கு, கபசுரக் குடிநீர், ஒரு நபருக்கு தலா 5 முக கவசம், பிஸ்கெட், சோப்பு உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார். திமுக தலைவர் இன்று அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதை போல கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் தடுப்பூசிகள் போதுமான அளவிற்கு கையிருப்பு இல்லை என்றும், தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைக்கு ஒரு விலை என மூன்று வகையான விலைக்கு கொடுக்கப்படுவதற்கு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள். 

மத்திய அரசுக்கு தருவதை போலவே மாநில அரசுகளுக்கும் விலை குறைத்து தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருக்கிறார். மத்திய அரசு கொரோனா தடுப்பு நிவாரணம் வழங்குவதில் தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழகத்தில் அதிமுகவை தவிர்த்து மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் பாரபட்சத்தை தொடர்ந்து சுட்டி காட்டி எச்சரித்து வந்தது. இன்றைக்கு முதன்முறையாக் அதிமுக அமைச்சர் தமிழகத்திற்கு வர வேண்டிய கேஸ் சிலிண்டர்கள் ஆந்திராவிற்கும் தெலுங்கானாவிற்கும் அனுப்பப்படுவதற்கு கண்டத்தை வெளிபடுத்தி இருக்கிறார். தமிழகத்திற்கும் போதுமான அளவில் ஆக்சிஜன், தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.  

 

click me!