அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதன் முறையாக செல்போனுக்கு தடை... முக்கிய முடிவு எடுப்பதால் அதிரடி..!

By vinoth kumarFirst Published Sep 28, 2020, 11:08 AM IST
Highlights

அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜாமர் கருவி அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜாமர் கருவி அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.  திமுகவில் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தான் உறுதியாகி உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதேபோல், கட்சிக்கு ஒற்றை தலைமையா ?  11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும், சசிகலா விடுதலை உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவி வருகிறது. ஆகையால்,  கூட்டணி பேச்சு வார்த்தையிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 

அதேபோல், அண்மையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தின் போது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நிரந்தர முதல்வர் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வருங்கால முதல்வர் என்றும் கோஷம் எழுப்பி அதிமுக பிளவுண்டு இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டினர். இந்நிலையில், அவற்றிற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக செயற்குழு கூட்டம் அவைத்ததலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 284 பேர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த முறை நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவில் பிரச்சனை ஏற்பட்டது என சர்ச்சை எழுந்த நிலையில் இம்முறை செல்போன் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் சசிகலா விடுதலையாக இருக்கும் நிலையில், அவரை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

click me!