டெல்லியை பின்னுக்கு தள்ளிய தமிழகம்... சிபிஎஸ் இ தேர்வில் தமிழக மாணவர்கள் கலக்கல்

First Published May 26, 2018, 1:20 PM IST
Highlights
cbse plus two result


மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.  பொருளாதாரவியல் பாடத்திற்கான கேள்வித்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அந்த பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது. 

இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல் நம்பர், பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

சிபிஎஸ்இ தேர்வில் மேக்னா ஸ்ரீவத்சா என்ற மாணவி 500க்கு 499 பெற்று முதலிடத்திலுள்ளார்.  சிபிஎஸ்ஏ மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த வருடம்  இந்தியா முழுவது பிளஸ் 2  தேர்ச்சி விகிதம் 83.01%.மாக உள்ளது.  திருவனந்தபுரம் மண்டலத்தில் அதிக தேர்ச்சி விகிதம் (97.32% ) பெற்று முதலிடத்தில் உள்ளது.  தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது சென்னை  மண்டலத்தில்  (93.87%) தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தில்  (89%) டெல்லி உள்ளது. 

click me!