
மதுரை மாவட்ட நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. காலை 9.50 மணிக்கு தேர்வு தொடங்கிய போது 96 மாணவர்களுக்கு இந்தி மொழியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் இந்தியில் வந்த வினாத்தாளை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தேர்வு அறை கண்காணிப்பாளர், தேர்வு மேற்பார்வையாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு 96 மாணவர்களுக்கு மட்டும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தமிழில் வினாத்தாள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு நீட் பொதுத்தேர்வை நடத்தியது.
தேர்வு நடந்து முடிந்த பின் மாணவர்களாகிய எங்களுக்கு எந்த வித மன உலைச்சலுக்கும் ஆளாகவில்லை என எழுதிவாங்கினார்கள். ஆங்கிலத்தில் இருந்ததால் மாணவர்கள் ஏதும் புரியாமல் கையெழுத்து போட்டு கொடுத்தனர். சிபிஎஸ்இ சார்பில் தான் மாணவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது. தலைமையாசிரியர் விளக்கம் அளித்தார்