
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன்னை விசாரிக்காமல் தனது மகன் கார்த்திக்கு சிபிஐ தேவையில்லாமல் தொல்லை கொடுக்கக்கூடாது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்த தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் தனது மகன் கார்த்திக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பான ஆவணங்களை அந்நிய நேரடி முதலீட்டு வாரியம் சிபிஐ-யிடம் சமர்ப்பித்தபோதிலும் தவறான தகவல்களை சிபிஐ பரப்புவது வருத்தமளிப்பதாகவும் சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.