
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைபெறும் மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா மாநாடு மதிமுக சார்பில் தஞ்சாவூரில் இன்று நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தஞ்சை வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ, அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தஞ்சையில் நடைபெறும் இந்த மாநாடு சரியாக பகல் ஒரு மணிக்கு துவங்குவதாக கூறினார்.
பேச்சாளர்களின் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நான் சரியாக மாலை 6 மணிக்கு இந்த மாநாட்டில் உரையாற்ற போகிறேன்.
இந்த மாநாட்டில், வரலாற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டில் ஏராளமான தோழர்கள், தாய்மார்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.
என்று வைகோ கூறினார்.