மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை.. சென்னை உயர்நீதி மன்றம் வேதனை. அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Oct 23, 2021, 12:39 PM IST
Highlights


இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், அதை பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மரணத்திற்குப் பிறகும் கூட சாதி மனிதனை விட வில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் சாதியைக் காரணம் காட்டி மயானத்தில் உடலை அடக்கம் செய்ய தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சாதியை காரணம் காட்டி மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ எதிர்ப்பு காட்டப்படும் நிலைமை தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. அதேபோல இறந்தவர்களின் உடலை தாங்கள் வசிக்கும் பகுதியின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து சாதிவெறியை அப்பட்டமாக உமிழும்  அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக பட்டியலின மக்கள் இது போன்ற சாதி வெறியால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

பல்வேறு தருணங்களில் போராட்டங்கள் நடத்தியே அதன்பிறகு உடல்களை அடக்கம் செய்யும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள ஏரி பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர் தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்கு செல்லும் சாலையில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: தவறாமல் இதை செய்யுங்க.. இல்லன்னா ஆக்ஷன் கடுமையா இருக்கும்.. காக்கிகளை அலறவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு.

அதற்கான வழக்கு விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கிராம மக்களுக்கு மயானத்திற்கு நிலம் ஒதுக்கி  உள்ளதாகவும், ஆனாலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதை பயன்படுத்த அந்த கிராமத்தில் உள்ள மேல்தட்டு மக்கள் அனுமதிக்காததால் அவர்கள் சாலை ஓரங்களில் உடல்நிலை எரிக்கும் அவலம் தொடர்வதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்:  காயத்ரி ரகுராம் சறுக்கி விழுந்தபோது விலகிய புடவை.. ஆபாசமாக பதிவிட்ட திமுக பிரமுகர்.. காவல் ஆணையரிடம் புகார்.

அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, ஆனந்த வெங்கடேசன் மரணம் அடைந்த பிறகு கூட சாதி ஒரு மனிதனை விட வில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இப்படி ஒரு மோசமான அவல நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என வேதனை தெரிவித்தார். மேலும், மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தானம் செய்யவும், அடக்கம் செய்யவும், அனுமதிக்க வேண்டும் என  உத்தரவிட்ட அவர் மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் எவராக இருந்தாலும் அவருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். அதேபோல் மயானம் என அனுமதிக்கப்படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசனின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக கருதப்படுகிறது. 
 

click me!