
இடைதேர்தல் அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளில் அரவக்குறிச்சியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கே.சி பழனிச்சாமிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு தாக்கல் செய்த மனுவில் பதிலளிக்க தமிழக அரசு , தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் மற்றும் இரண்டு கட்சிகளும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தள்ளி வைக்கப்பட்ட தஞ்சை ,அரவக்குறிச்சி மற்றும் உறுப்பினர் உயிர் இழந்ததால் தள்ளிவைக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரும் நவம்பர் 19 ஆம் தேதி இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானதமிழகத்தில் கடந்த மே மாதம் 234 தொகுதிகளுக்கு சட்ட மன்ற தேர்தலில் நடைபெற்றது இதில் தஞ்சாவூர்,அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்யபட்டதை அடுத்து இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இடை தேர்தல் நவம்பர் 19 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதில் நடைபெற கூடிய இடைதேர்தலில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,திமுக சார்பில் மீண்டும் கே.சி.பழனிச்சாமியை வேட்பாளராகவும் போட்டி இட உள்ளனர்.
அப்படி நடந்தால் மீண்டும் நியாயமான முறையில் தேர்தல் நடக்காது. எனவே அவர்கள் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்,அவர்களுக்கு கட்சியின் ஒதுக்கப்பட கூடாது,அவ்வாறு போட்டியிட்டால் பதிவான ஒட்டுகளை எண்ண கூடாது, மேலும் அவர்களது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என கரூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தாரர் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் ஜோதி, கடந்த தேர்தலின் போது அங்கு ஏராளமான பணம் கையப்படுத்துப்பட்டுள்ளது. வேட்பாளரின் மகனிடம் இருந்தே பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வரலாற்றில் முதல் முறையாக வேட்பாளர்கள் பணம் பட்டுவாடா செய்யப்பட்டததின் விளைவாக தேர்தலே ரத்து செய்யபட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் மகாத்மா காந்தியே தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட பெற முடியாது. எனவே குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிட்டால் அவர்களது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்றார்.
அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட்டு எந்த இடைக்கால உத்தரவும் பிறபிக்க முடியாது. இந்த வழக்கில் விரிவாக விசாரணை நடத்தப்பட இருப்பாதல் எதிர் மனுதாரர்களின் பதிலை கேட்டு பின்னர் முடிவு செய்யலாம்.
இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம், அதிமுக, திமுக, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கே.சி.பழனிசாமி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.