அடுத்தடுத்து சிக்கும் திமுக அமைச்சர்கள்.. தப்புவாரா தங்கம் தென்னரசு? 3 நாள் டைம் கொடுத்த நீதிபதி.!

By vinoth kumarFirst Published Feb 28, 2024, 11:54 AM IST
Highlights

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார்.

தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. 

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை நீதிபதி செப்டம்பருக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி.. இறுதியில் நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

அதேபோல, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகவுள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கு விசாரணை பிப்ரவரி 28, 29 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க:  காவலர் மீது இரும்புக் கம்பியால் கொடூர தாக்குதல்! ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிய தமிழகம்! ஆளுங்கட்சியை விளாசும் EPS!

இது மட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான விசாரணை மார்ச் 5, 6 ஆகிய தேதிகளிலும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான விசாரணை மார்ச் 7, 8 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், நிர்ணயிக்கப்பட்ட இந்த தேதிகளில் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மார்ச் 8ம் தேதி வாதங்களைத் துவங்கி 11ம் தேதி நிறைவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

click me!