முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு.. அடுத்து ஓபிஎஸ்..? அலறும் அதிமுக.

By Ezhilarasan BabuFirst Published Nov 10, 2021, 1:00 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா தமிழகத்திற்கு பெற்றுத்தந்த உரிமையை கேரளாவிற்கு தமிழக அரசு விட்டுக் கொடுத்து விட்டது என்றும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசின் உரிமை பறிகொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அதிமுக திமுக அரசை கடுமாயாக விமர்சித்து வருகிறது. 

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 998 அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் விளைவாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. தற்போது அதிமுக பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் முல்லைப் பெரியாறு அணை வைத்து தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதாவது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கான உரிமையை விட்டு கொடுக்கப்பட்டதாக தமிழக அரசு மீது இரு கட்சிகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றன, மதுரை தேனி, கம்பம், சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நீர் ஆதாரமாக இருந்துவருகிறது முல்லை பெரியாறு அணை. அந்த  அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கினால் மட்டுமே ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு  குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீர் தேவைகள் பூர்த்தி ஆகும். ஆனால் கேரளா அணையில் 152 அடு உயரத்திற்கு தண்ணீர் தேக்க தொடர்ந்து தடையாக இருந்து வருகிறது. அதாவது முல்லை பெரியாறு அணை சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது என்றும், அதனால் அதிக தண்ணீர் தேக்கினால் அழுத்தத்தின் காரணமாக அணை பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது என்றும்,  அணையை சுற்றி வாழும் 50 லட்சம்  மக்களின் உயிருக்கே அது பெரும் ஆபத்தாக முடியும் என்றும் கூறி முல்லை பெரியாறு அணையில் அதிக நீர் தேக்க கூடாது என தொடர்ந்து  அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து அணை குறித்து இவ்வாறுதவறான தகவல்களை கேரளா பரப்பி வருகிறது என்றும், உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி அணையில் 142 அடி நீரைத் தேக்கி கொள்ளலாம் என்றும், பின்னர் அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடிக்கு தண்ணீர் தேக்கி வைத்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றார் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் முழு கட்டுப்பாடும் தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது, இந்நிலையில் மீண்டும் முல்லை பெரியாறு அணையில் அதிக நீரை தேக்கக்கூடாது என கேரளா எதிர் குரல் எழுப்பி வருக்கிறது. கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அணையிலும் அதிக தண்ணீரை தேக்க கூடாது என கேரளமாநிலத்தை சேர்ந்த ஒருவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அணை 142 அடி தண்ணீரை எட்டுவதற்கு முன்னரே அணையிலிருந்த தண்ணீரை தமிழக அரசு அதிகாரிகள், கேரளா அதிகாரிகள் மற்றும் கேரள அமைச்சர்கள் முன்னிலையில் திறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா தமிழகத்திற்கு பெற்றுத்தந்த உரிமையை கேரளாவிற்கு தமிழக அரசு விட்டுக் கொடுத்து விட்டது என்றும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசின் உரிமை பறிகொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அதிமுக திமுக அரசை கடுமாயாக விமர்சித்து வருகிறது. அத்துடன் கேரளா அரசுக்கு முல்லை பெரியாறு அணை உரிமையை விட்டுக்கொடுத்த திமுகவை கண்டித்து மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட  மாவட்ட தலைநகரங்களில் திமுக போராட்டம்  நடத்தியது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். இந்நிலையில் 140 தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் 998 அதிமுக தொண்டர்கள் மீது தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கம்பத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையைக் காக்க திமுக தவறிவிட்டது என அவர் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த தாக ஒ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

click me!