கொரோனா குறைந்துவிட்டது என அசால்டா இருக்காதீங்க.. பயங்கரமா எச்சரிக்கும் ராதாகிருஷ்ணன்.

Published : Feb 15, 2022, 12:47 PM IST
கொரோனா குறைந்துவிட்டது என அசால்டா இருக்காதீங்க.. பயங்கரமா எச்சரிக்கும்  ராதாகிருஷ்ணன்.

சுருக்கம்

நோய் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் Covid Care Centre  மையங்கள் அடுத்த 15 நாட்களில் ஆய்வு செய்து தேவைக்கேற்ப படிப்படியாக குறைக்கப்படும். ஆனால் அதில் உள்ள ஊழியர்கள் வேறு பணிக்கு மாற்ற நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.  

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு கட்டணமே வசூலிக்க அறிவுறுத்தி கட்டண நிர்ண்யக் குழுவுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, இதனை கண்கானிக்க தனி குழுக்கள் உள்ளன. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரிகளில் இணைந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி குறித்தான அடிப்படை வகுப்புகள் தொடங்கியுள்ளன. சென்னை மருத்துவ கல்லூரியில் வகுப்பில் மாணவர்களை பார்வையிட்ட பின்னர்  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 6658 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 

கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 1.30 லட்சம் படுக்கைகளில் 2690 கொரோனா நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று குறைவாக உள்ளது என கவனக்குறைவாக இருக்க கூடாது, பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில் கூடுதல் கவனம் தேவை என்றார். 1.13கோடி மக்கள் 2வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. 3.74 லட்ச மாற்றுத் திறனாளிகளும் தடுப்பூசி எடுக்கவில்லை. 18-44 வயதுள்ள சுமார் 30லட்சம் பேர், 60க்கும் மேற்பட்டோர் என சேர்த்து 45 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி எடுக்கவில்லை. தடுப்பூசி எடுக்காதவர்கள் எடுத்துக்கொள்ள தொடர்ந்து அறுவுறுத்துகிறோம். 

நோய் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் Covid Care Centre  மையங்கள் அடுத்த 15 நாட்களில் ஆய்வு செய்து தேவைக்கேற்ப படிப்படியாக குறைக்கப்படும். ஆனால் அதில் உள்ள ஊழியர்கள் வேறு பணிக்கு மாற்ற நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மருத்துவ ஆணையம் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 50% இடங்களுக்கு அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி கட்டண நிர்ணயக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, இதனை கண்கானிக்க தனி குழுக்கள் உள்ளன. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், கூடுதல் கட்டணம் குறித்த புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைப்பேசி எண் அறிவிக்கப்படவுள்ளது, அதன் வழி மாணவர்கள் பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என்றார்.
 

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!